"ஏண்டி இப்படி பண்ண.பாரு உங்கப்பா எப்படி தவிச்சி போய் இருக்காரு"என்று கூற நந்தினியை முறைத்தவள்
"என்னடி எதுக்கெடுத்தாலும் என்ன அடிக்கிற.இனிமே இந்த கை நீட்ற வேலை எல்லாம் வெச்சிக்காத.அது என் செல்லக்கட்டிக்கு மட்டும்தான்"என்று கூற
"எருமை முதல்ல நான் கேட்டதுக்கு பதில சொல்லு"என்றாள்.
"இங்க பாரு நந்தினி கடைசி மூனு நாளா இவங்கள கவனிச்சு பார்த்ததுல என் அம்மா அப்பாக்கிடையில ஒரு பினைப்பு உருவாகி இருக்கு.அத இன்னும் கொஞ்சம் ஸ்ட்றாங்கா போடலாம்னுதான் இப்படி ஒரு பிட்ட போட்டேன்"என்று கண்ணடிக்க
"சரி நீ பிட்ட போட்ட அது எப்படி அம்மாவும் அதே மாதிரி ரியாக்ட் பண்ணாங்க.அவங்களுக்குதான் சாதாரண முதுகுவலின்னு சொல்ர.அம்மாக்கு தெரியாம எப்படி ..."என்று இழுக்க
"அதெல்லாம் சிம்பிள்பா.டாக்டர்கிட்ட செக் பண்ண போகும் போதே நான் அவங்க கிட்ட எங்கம்மாவும் அப்பாவும் கொஞ்சம் சண்டைல இருக்காங்க.சோ நீங்க இப்படி ஒரு பொய்ய சொன்னா அவங்க ஒன்னு சேர்ந்துடுவாங்கன்னு சொன்னேன்.அதே போல அவங்களும் பண்ணிட்டாங்க.முதல்ல முடியாதுன்னுதான் சொன்னேன்.ஆனா டாக்டர் நம்ம ஆளா அதான் சொன்னதும் உடனே ஓக்கே சொல்லிட்டாங்க"என்றாள்.
"அப்போ நீ எந்த டாக்டர்கிட்டடி போன"என்று கேட்க அவள்
"எல்லாம் வீணா அம்மாகிட்டதான், வேற யார நமக்கு தெரியும்.என்னோட இந்த விளையாட்டுக்கு அவங்கதான் சரி"என்று கூற அவளை முறைத்தவள்
"சரி இப்போ உங்கம்மா அப்பாக்கு நீ சொன்னது பொய்யினு தெரிஞ்சா பெரிய ப்ராப்ளாம் ஆகிடாது "என்று கேள்வியாக கேட்டவளை
"ப்ராப்ளம்லாம் ஆகாது ஆனா" என்று இழுத்த சந்தியாவை சந்தேகமாக
"என்னடி ஆனா"என்று கேட்க
"இல்லப்பா ஒரு வேல அவங்க ராசியாகிட்டாங்கன்னா ஒரு வேல எனக்கு தங்கச்சி இல்லன்னா தம்பி பாப்பா வந்துடுமோன்னு பயமா இருக்கு"என்றவளை நந்தினி
BINABASA MO ANG
ஆகாஷனா
Non-Fictionமுகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும் ஒருத்தனின் காதல்... கற்பனைக்கும் நிஜத்துமான போரட்டம் அவனுக்கு.. நிஜத்துக்கு நிழலுக்குமான போராட்டம்...