ஷனா - 12
"உங்க ப்ரெண்டோட இதயம் ரொம்ப பலவீனமா இருந்திருக்கு. ஏதோ அதிர்ச்சியான செய்திய கேட்டதாலா அவங்க இதயம் வேகமா துடிச்சதால அவங்க இப்போ சீரியசா இருக்காங்க.எதுவா இருந்தாலும் இப்போ எங்களால எதுவும் சொல்லமுடியாது"என்று கூறி செல்ல நேத்ரா அழ ஆரம்பித்தால்.தகவல் கேட்டு அவ்விடத்துக்கு ஆகாஷனாவின் தாயும் தந்தையும் வர அவர்களிடம் சென்ற நேத்ரா
"அம்மா என்னால உங்களுக்கு பண்ணி கொடுத்த சத்தியத்த காப்பாத்த முடியல.என்னாலதான் ஆகாஷனாக்கு இப்படி ஆச்சி"என்று பித்து பிடித்தவள் போல அழ என்ன நடந்தது என்று தெரியாமல் ஆகாஷனாவின் தாயும் தந்தையும் முழிக்க அவர்களிடம் வந்த அஜய் நடந்த அனைத்தையும் கூறி
"ஆண்ட்டி இதுல நேத்ராவோட தப்பு எதுவுமே இல்ல.எல்லாமே என்னாலதான்"என்று அவனும் கண்கலங்க அவர்கள் என்ன கூறுவது என்று தெரியாமல் கவலையுடன் இருந்தனர்.
என்னதான் நாம் ஒன்றை நினைத்தாலும் கடவுள் என்ன நினைத்தாரோ தெரியவில்லை வெளியில் வந்த டாக்டர்"சாரிம்மா அவங்க இதயம் ரொம்ப பலவீனமா இருந்திருக்கு, மெடிடேசன் மூலமா அவங்க இதயத்துடிப்ப ஒரு கட்டுப்பாட்டில வெச்சிருந்திருக்கா.ஆனா அந்த மெடிடேசனையும் மீறி ஏதோ ஒரு கவலையான விசயம் அவங்க மனச தாக்கியிருக்கு.உங்க பொண்ண எங்களால் காப்பாற்ற முடியல "என்று கூற எல்லோருக்கும் இடி விழுந்ததைப்போலானது.யாருக்கு யார் ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் ஆளுக்கு ஒரு மூலையில் நின்று அழுது கொண்டிருக்க நேத்ராவின் அருகில் சென்று அவளை சமாதானாப்படுத்த முயன்ற அஜய்யை அவள் கட்டிக்கொண்டு
"என் ஷனா என்ன விட்டு போயிட்டா அஜய் அவள திரும்ப வர சொல்லுங்க.அவ இல்லாம என்னால வாழ முடியாது"என்று அழ அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் அவளை அணைத்துக்கொண்டு இருந்தான்.
ஆகாஷனாவுக்கு சுகமில்லை என்பதை அறிந்து அவளை பார்க்க வந்த கிஷோர் இங்கு நடப்பதை கண்டு மனதுக்குள் வெதும்பினான்.காரணம் ஆகாஷானாவை அவன் ஒரு தலையாக காதலிக்க ஆரம்பித்திருந்தது. மனதுக்குள் புலம்பிய கிஷோர்
'ஏன் கடவுள் எனக்கு பிடிச்ச எல்லாத்தையும் என்கிட்ட இருந்து நிரந்தரமா பிரிச்சிடுறாரு' என்று கவலைப்பட்டவன் மனதை கல்லாக்கிக்கொண்டு அவன் வந்த சுவடே தெரியாமல் அவ்விடத்தை விட்டு நீங்கினான்.
BINABASA MO ANG
ஆகாஷனா
Non-Fictionமுகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும் ஒருத்தனின் காதல்... கற்பனைக்கும் நிஜத்துமான போரட்டம் அவனுக்கு.. நிஜத்துக்கு நிழலுக்குமான போராட்டம்...