"அப்போ நான் வேறொரு பொண்ண கல்யாணம் பண்ணி...,எதுக்கு வேறொரு பொண்ணு சந்தியாவையே கல்யாணம் பண்ணி டிவோர்ஸ் பண்ணிட்டு உன்ன கல்யாணம் பண்ணிக்க கேட்டா நீ ஓக்கே சொல்லுவியா "என்றவனை முறைத்தவள் ஆட்டோ ஒன்றை அழைத்து அவளின் வீட்டுக்கு சென்றால். அவள் சென்றதும் உடனே சந்தியாவுக்கு கால் செய்த ராஜீவ் இங்கு நடந்த எல்லாவற்றையும் கூற புன்னகைத்தவள்
"டேய் ஒன்னும் யோசிக்காத.உன்ன அவ பின்னாடி சுத்தல்ல விடனும்னு மேடம் ரொம்பதான் பண்றாங்க. உனக்கு தான் நான் முன்னாடியே சொல்லிருக்கேன்ல அன்னைக்கு அவ உங்கிட்ட அப்படி பேசிட்டு வந்து எவ்வளவு பீல் பண்ணான்னு.சோ ஒன்னும் யோசிக்காத.அவளுக்கு இன்னைக்கே இன்னொரு சர்ப்ரைஸ் இருக்குள்ள" என்று கூற அவனும் புன்னகைத்து
"ஆமால்ல சரி நான் போன வைக்கிறேன் பாய் "என்றான்.
வீட்டிற்கு வந்த நந்தினிக்கு அங்கிருந்தவர்களை கண்டதும் ஆச்சரியமாக இருந்தது.உடனே நந்தினியின் தாய்
"நந்தினி போய் ரெடியாகுமா. உன்ன பொண்ணு பார்க்க வந்திருக்காங்க"என்று கூற ராஜீவின் மேல் ஆத்திரம் கொண்டவள் எதுவும் பேசாமல் தனது அறைக்குள் செல்ல அங்கு ராகவி
"அண்ணி ,சாரி உங்கள அண்ணின்னு சொல்லலாம்ல" என்றவளை நந்தினி புன்னகையுடன் பார்த்து எதுவும் பேசாமல் இருந்தால். ராகவியுடன் இருந்த ராஜீவின் அக்கா
"நந்தினி உன்ன நாங்க யாருமே கட்டாயப்படுத்தல. உனக்கு இஷ்டம்னா மட்டும்தான் இந்த கல்யாணம். ராஜீவ் கூட அதத்தான் சொன்னான்.உங்கிட்ட சில விசயங்கள் ஓப்பனாவே பேசனும்னுதான் உன் ரூம்ல நாங்க வெயிட் பண்ணோம். பெரியவங்களுக்கு அது தெரிய வேண்டாம்" என்றவளை என்ன என்பது போல கேட்க
"இன்னைய நாளுக்குத்தான் நாங்க 6 மாசமா வெயிட் பண்ணோம் ஏன் தெரியுமா, இன்னைக்கு நீ புது நந்தினி.அப்புறம் அதுமட்டுமில்லாம எங்க அம்மாக்கு ஆரம்பத்துல ராஜீவ் உன்ன விரும்புறேன்னு சொன்னதும் அவங்களுக்கு பிடிக்கல. என் பையனுக்கு விவாகாரத்தான பொண்ண கட்டிக்கொடுக்க மாட்டேன்னு ரொம்ப பிடிவாதமாக இருந்தாங்க" என்றவளை நிமிர்ந்து கேள்வியாக நந்தினி நோக்க புன்னகைத்த ராஜீவின் அக்கா
ESTÁS LEYENDO
ஆகாஷனா
No Ficciónமுகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும் ஒருத்தனின் காதல்... கற்பனைக்கும் நிஜத்துமான போரட்டம் அவனுக்கு.. நிஜத்துக்கு நிழலுக்குமான போராட்டம்...