சிந்தனை - இறுதி

807 73 16
                                    

என்னடா இவன் இரண்டாவது நாளும் ஏதோ சம்பந்தமில்லாமல் பதிவிடுகின்றானே என எண்ணுபவர்களிடம் முதலில் மன்னிப்பு கேட்டவனாக,,,
எனது பதிவில் நான் பெண்களுக்கு மட்டுமே அறிவுரை வழங்கி ஆண்களின் தவறை திருத்துவதற்கு எதுவும் கூறவில்லை என்றும் பெண்களின் பக்கமே எல்லா பிழைகளும் இருப்பது போல எனது பதிவு இருப்பதாக சில சகோதரிகள் என்னிடம் கூறினர்.

வாட்பெட்டில் 100ற்கு 95 பெண்களே பயன்படுத்துகிறார்கள்.எனக்கு தெரிந்த ஆண் பயனாளிகள் மொத்தமாக பத்திற்கும் குறைவு.அந்த பத்து பேருக்கும் நீங்கள் எப்படி பெண்களை கண்ணியமாக பார்க்க வேண்டும் என்று கூறுவதை விட என் கண் முன் இருக்கும் சகோதரிகளுக்கு எப்படி பாதுகாப்பாக இருக்கலாம் என்று கூறுவது சரியாக இருக்கும் என்று  என் மனதில் தோன்றியதாலேயே அந்த பதிவை இட்டேன். இந்த பாழா போன முகநூலில் மிகவும் ஆக்டிவ்வாக ஒரு காலத்தில் இருந்தவன் நான்.அங்கு நடக்கும் வேண்டத்தகாத செயற்பாடுகள் பிடிக்காமல் அதை விட்டு வாட்பெட் வந்தேன்.எனது முகநூலை திறந்து பார்த்தால் தெரியும்.நான் அங்கு பதிவிட்டு 2 வருடம் இருக்கும்...

தமையனும்,தகப்பனுமே தவறாக பெண்களிடம் நடக்கும் போது என்ன செய்யலாம் என்று சரியான நெத்தியடி கேள்வி கேட்டிருந்தார் சகோதரி arunlovely  . மனதில் பட்டதை தைரியமாக கூறும் துணிவுள்ள பெண் அவர்.அவரின் புதிய பதிவை பார்த்த பின் எனக்கு‌‌ மன்தில்‌ தோன்றியதே இந்த பதிவு.

எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்க நான் ஒன்றும் மேதாவி இல்லை.அதுவும் இது போன்ற காமுகர்களை தேடி நான் எங்கே என்று சென்று அவர்களுக்கு அறிவுரை வழங்க.எனக்கு தெரிந்த சகோதரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய என்னால் முடிந்த ஒரு சிறு முயற்சியை நான் செய்தேன்.மனதில் வக்கிரம் உள்ளவனை என்னவென்று திருத்துவது என்று சத்தியமாக எனக்கு புரியவில்லை...இல்லை அதை எப்படி செய்வது என்று தெரியாத முட்டாளாக கூட நான் இருக்கலாம்.அதனாலேயே கேடுகெட்ட மிருகங்களிடம் இருந்து பாதுகாக்க என்ன செய்யலாம் என்று கூறினேன்.கேள்விகள் கேட்பது மிக இலகு.பதில்‌ கூறுவது ...ஹ்ம்ம்ம்.

தமையன்,தந்தைகளே பெண்களுக்கு பாதுகாப்பில்லாமல் இருக்கின்றார்களே அதற்கு என்ன செய்ய என்று கேட்டதற்கு சத்தியமாக என்னிடம் பதில் இல்லை.யாரிடம் அவள் சென்று முறையிடுவது ?இப்போதும் என்னை பொறுத்தவரை அது அவர்களின் வீட்டில் இருக்கும் ஒரு நபராகவே இருக்க வேண்டும் என்று கூறுவேன்.

மனதில் வக்கிரம் பிடித்த மிருகங்களுக்கு உச்சபட்ச தண்டனை கொடுத்தால் இது போல வக்கிர எண்ணம் உள்ள மற்றவர்கள் அந்த தன்டனைக்கு பயப்படலாம்.அதுவே எனக்கு தெரிந்த ஒரு தீர்வாக இருக்கும்.மாறாக வக்கிரம் உள்ளவனிடம் சென்று உபதேசம் செய்வதில் எந்த பிரயோசனமும் இருக்காது.

ஆண்களுடன் பேசாதீர்கள், சமூக வலைத்தளம் பாவிக்காதீர்கள் என்று முழுமையாக கூறவில்லை.யாரும் அதனை செய்யும் போது வீட்டில் உள்ளவர்களிடம் ஒரு தகவலாகவாச்சும் கூறிவிடுங்கள் என்றே கூறினேன்.என்னிடம் பேசும் பெண்களிடம் நான் கூறுவது..திருமணமாகாத பெண் என்றால் வீட்டில் கூறும்படியும்,திருமணமான பெண் என்றால் கணவனிடமும் கூறுமாறு சொல்வேன்.அதற்கு தயங்குபவர்களுடன் நான் பேசுவது இல்லை.அதுவும் பிந்திய இரவுகளில் கொமன்ட் செய்பவர்கள் என்னிடம் திட்டு வாங்கியதும் உண்டு.இது அவர்களின் சுதந்திரத்தா பறிப்பது அல்ல.மாறாக என் சகோதரி,என் மகளுக்கு நான் எப்படி அறிவுரை செய்வேனோ அதுபோலவே.

என்னுடைய முந்தைய பதிவால் யார் மனமாவது புன்பட்டிருந்தால் மன்னிக்கவும்.இதுவரை காலமும் என்னுடைய எழுத்துக்களுக்கு ஆதரவளித்த எல்லோருக்கும் நன்றிகள்.

நிச்சயமாக இது கோபத்தால் எழுதிய பதிவு அல்ல.எனது ஆற்றாமையை வெளிப்படுத்த எழுதிய ஒன்று.

ஆகாஷனாWhere stories live. Discover now