ஒரு வார காலம் முடிந்திருக்க மூன்று நண்பர்களும் ரயிலில் தனது பயணத்தை தொடங்கி இருந்தனர் .அன்று வழக்கம் போல் ஜான்வியும் ஜீவிதாவும் லூட்டி அடித்த படி வந்து கொண்டிருக்க ப்ரவீனோ எங்கோ வெறித்த பார்வையோடு சோகம் ததும்பும் முகத்தோடு அமர்ந்திருந்தான் .
முதலில் அதை கவனியாமல் இருந்த இரண்டு பெண்களும் பேச்சின் ஊடே "டேய்ய் மண்டகசாயம் "என்று கூப்பிட அவன் அப்பொழுதும் அசையாமல் எதிரில் இருந்த பர்தயே வெறித்துக்கொண்டிருந்தான் .ஏதோ சரி இல்லை என்று உணர்ந்த ஜான்வியும் ஜீவிதாவும் அவனின் இரு புறமும் சென்று அமர்ந்து கொண்டவர்கள் "என்னடா என்று கேட்க
அவனோ தலையை கையில் தாங்கியவன் "ரேஷ்மி பிரேக் up பண்ணிக்கலாம் னு சொல்லிட்டு போய்ட்டா "என்க இருவருமோ உட்சபட்ச அதிர்ச்சியில் இருந்தனர் .
அவர்கள் அறிந்திருந்தனரே தனது நண்பன் எப்படி மூன்று வருடங்களாக அந்த பெண்ணை தன உயிர் மூச்சென நினைத்து வாழ்ந்தான் என்று .ரேஷ்மி அவர்களின் பிரிவு தான் .பிரவீனிற்கு முதல் நாள் பார்த்ததிலிருந்து ரேஷ்மியின் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது .
அது காலப்போக்கில் காதலாக மாற முதல் வருடம் முடியும் தருவாயில் தனது காதலை கூறினான் .அவளும் ஒப்புக்கொள்ள மூன்று வருடமும் தித்திக்கும் காதலுடன் அவளை உயிர்மூச்சென காதலித்து வளம் வந்து கொண்டிருந்தான் பிரவீன் .ஜீவிதாவிற்கும் ஜான்விக்கும் ஏனோ ரேஷ்மியை முதலிலிருந்தே
பிடிக்காமல் போனது .எனில் தனது விருப்பு வெறுப்புகளை தன் நண்பனின் மேல் திணிப்பவன் நல்ல நண்பனாய் இருக்க முடியாதல்லவா ஆதலால் ஜான்வியும் ஜீவிதாவும் மௌனமாகவே இருந்தனர் .
நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் காதல் வாழ்க்கையில் திடீரென்று என் இந்த முடிவு என்று குழம்பியபடி தோழிகள் இருவரும் இருக்க பிரவீன் கூறிய பதில் இருவரையும் கொதிநிலைக்கே செல்ல வைத்தது.
பிரவீன் "எல்லாம் நல்லா தான் போய்கிட்டு இருந்துச்சு ஒரு மாசம் முன்னாடி அவ வீட்டுல அவளுக்கு ஒரு மாப்ள பார்த்தாங்க .அமெரிக்கா settled , அவளோட கேஸ்ட் ,அப்பா அம்மாவோட விருப்பம் சோ oknu சொல்லிட்டாளாம் .நா சொன்னேன் வீட்ல வந்து பேசுறேன்னு அவ எதுவுமே சொல்லாம போய்ட்டா.ஒரு வாரமா ட்ரை பண்ணேன் அவள்ட பேசுறதுக்கு பாக்குறதுக்கு நோ யூஸ்.இன்னைக்கு கால் பண்ணி நா காலேஜ்ல ஜஸ்ட் டைம் பாஸ்க்காக தான் உன்ன காதலிச்சேன் மத்தபடி எந்த பீலிங்க்ஸும் உன் மேல இல்ல இனி என்ன தொந்தரவு பண்ணாதனு சொல்லிட்டு வச்சுட்டா "என்று கூற