ஆதி அறையின் வாயிலில் நின்றிருந்த தன் தாயை பார்த்து அதிர்ந்தான் .பார்வதி அவனை முறைத்தபடி கை கட்டி நின்றவர் "எத்தனை நாளா இதெல்லாம் நடக்குது ஆதி ?"என்று கேட்க
அவனோ அவர் அருகில் சென்று கதவை சாத்தி தாழிட்டவன் "அம்மா கொஞ்சம் வந்து உக்காருங்க சொல்றேன் "என்று சொல்ல
அவரோ "என்னடா நெனச்சுட்டு இருக்க ?உன் இஷ்டத்துக்கு பண்ற ?உன் அப்பாவை தல குனிய வைக்கணும்னே கங்கணம் கட்டிக்கிட்டு திரியுரியா ?எங்க இருந்ததா இவ்ளோ தைரியம் வந்துச்சு உனக்கு "என்று கத்த
அவனோ "அப்பாவை தல குனிய வைக்கணும்னு அலையால அம்மா அக்கா கொஞ்ச நாள் உயிரோட இருக்கணும்னு நெனச்சு இதெல்லாம் பண்ணுறேன் .உங்களுக்கு அவளோட ஸ்டேஜ் என்னனு தெரியுமா?அவ ஒழுங்கா சாப்பிட்டு பல நாள் ஆச்சு .சாப்பிடுற சாப்பாடா எல்லாம் பாதி நேரம் வாந்தியா எடுத்துருறா .கொஞ்சம் கூட தூங்குறது இல்ல, எதையும் வாய திறந்து பேசுறது இல்ல, இன்னும் கொஞ்ச நாள் விட்டா கூட பைத்தியம் ஆயிடுவா.அண்ட் அவ காதலிச்சது ஒன்னும் third rated பொறுக்கியவோ ரௌடியாவோ இல்ல .நீங்களே தேடி கண்டு புடுச்சாலும் அப்டி பையன்லாம் கிடைக்க மாட்டான்.அப்பா அவள் வாழ்க்கை தன்னோட வறட்டு பிடிவாதத்துக்காகவும் வெட்டி கௌரவத்துக்காகவும் பலியாக்க பாக்குறாருமா நீயே இதை படுச்சு பாரு "என்று கூறி அவரின் கையில் அவளின் தந்தை எழுதி வைத்திருந்த டைரியை கொடுக்க அவரோ முதலில் வேண்டா வெறுப்பாக வாங்கி படித்தவர் பின் அவர் செய்து வைத்திருந்த காரியத்தை அவரின் மூலமாகவே அறிந்ததை கண்டு கைகள் நடுங்கியது .
ஏழு வருடம் தவமிருந்து பெற்ற மகளை அல்லவா கொல்லுவேன் என்று கூறி இருந்தார் தனது கௌரவத்திற்காக .கண்களில் கண்ணீர் நிறைய மகளின் இந்த ஒரு வார நிலையை யோசித்து பார்த்தவரிற்கு முதல் முறையாக பயம் வந்தது .ஏனெனில் அவள் இப்படியே இருந்தால் ஒரு கட்டத்தில் அதீத மனஉளைச்சலில் எந்த முடிவு வேண்டும் என்றாலும் எடுக்கலாமே .
அவர் யோசனையில் இருக்க ஆதி "இன்னும் உங்களுக்கு seriousness புரியலம்மா "என்றவன் தனது cupboardil இருந்து ஒரு டப்பாவை எடுத்து வந்தான் .