16

1.9K 132 68
                                    

scootyயில் கிளம்பியவள் நேராய் போகும் வழியில் ஜீவிதாவின் வீட்டில் அந்த scootyai வைத்தவள் அவளை இன்று அலுவலகத்திற்கு அந்த scootyil வர சொல்லி விட்டு அங்கிருந்து ஆட்டோ பிடித்து மாலிற்கு வந்து விட்டாள் .

வந்து இறங்கி வாசலின் முன்னே நின்று கௌதமிற்கு அழைப்பு விடுக்க அவள் புறமண்டையிலேயே ஒரு அடி விழுந்தது "யார்டா அது" என்று திரும்பி பார்க்க கௌதம் ஒரு கருப்பு நிற டீ ஷர்டில் அவனின் மந்தகாசப் புன்னகையோடு நின்றிருக்க ஜான்வியோ வழக்கம் போல் அவனின் கண்களில் தன்னிலை மறந்து உறைந்து நின்றாள் .

கௌதம் "எப்போ வர சொன்னா எப்போ வர ஜானு ?வா உள்ள போலாம் "என்று சொல்லிவிட்டு முன்னே நடக்க அதன் பின்னே தெளிந்தவள் அவன் பின் நடந்தாள் .

நடந்தபடி "நேத்து கேக்க மறந்துட்டேன் .மீட்டிங் எப்படி டா முடுஞ்சுது ?"என்க

அவனோ "வழக்கம் போல தான் நல்ல முடுஞ்சுச்சு சாப்டியா காலைல ?"என்க

அவளோ அவன் கண்களை கவனமாய் தவிர்த்தபடி "இல்லடா மறந்துட்டேன் கிளம்புற அவசரத்துல "என்க

அவனோ "நெனச்சேன் வா போய் சாப்பிடலாம் "என்று ஒரு உணவகத்தினுள் நுழைத்தனர். அங்கே .அங்கு வட்ட வடிவிலும் சதுர வடிவிலும் மாறி மாறி மேசைகள் போடப்பட்டிருக்க ஒரு நான்கு பேர் அமரும் சதுர வடிவ மேசையும் ஒரு இரண்டு பேர் அமரும் வட்ட வடிவ மேசையும் மட்டுமே மீதம் இருந்தது .

கௌதம் "ஜானு எங்க உக்காரலாம் ?"என்க

அவளோ அந்த இருவர் அமரும் மேசையை காட்டி "அங்க போகலாம் கௌதம் "என்றாள் .

பின் அங்கு செல்ல கௌதம் அவளிற்கு எதிரே அமர்ந்தான் .ஜான்வி அவனை ஏனோ நிமிர்ந்து பார்க்கவே தயங்கினாள் மனதில் "டெய்லி பேசுறேன் ஆனா ஏன் இப்டி அவன் முன்னாடி நேர்ல வந்தா மட்டும் இப்படி அவனை பாக்கவே முடியாம தடுமாறுறேனோ தெரிலயே. எதிர்ல வேற உக்காந்துருக்கான் "என்று மனதில் புலம்ப அவனோ அவளை அப்பொழுது தான் முழுதாய் கவனித்தான்.

தோழனா என் காதலனாWhere stories live. Discover now