இது என்ன வகையான அன்பு என்று குழம்பிய பிரவீனின் மனதில் அவனே அறியாமல் ஒரு வித இதம் பரவுவதை தடுக்க முடியவில்லை .இவ்வாறு கலாட்டாக்களுடன் ஜான்வியையும் கௌதமையும் அவனது வீட்டிற்கு அழைத்து சென்றவர்கள் மாலை ஆனதும் களைய துவங்கி விட்டார்கள் புதுமணத் தம்பதியருக்கு அவர்களுக்கான தனிமையை தர வேண்டி .
திருமணத்திற்கு பின்னான சம்பிரதாயத்திற்கு ஏற்பாடுகள் எதுவும் செய்ய வேண்டாம் என்று கெளதம் முன்னே கூறி விட்டான் .கெளதம் "அத்தை இந்த கல்யாணம் எங்க உறவுக்கு ஒரு அங்கீகாரம் குடுக்க தான் நடக்குது .அவளுக்கும் இதுக்கான ஏஜ் இல்ல நானும் இதுக்கெல்லாம் மென்டலி prepare ஆகல .வேற எதுவும் ஏற்பாடு பண்ணீராதீங்க "என்று கூறி விட்டான் .பெரியவர்களும் சிறியவர்கள் மனநிலை உணர்ந்து சேரி என்று கூறி விட்டனர்
அனைவரும் ஆறு மணி போல் சென்று விட ஆயாசமாய் உணர்ந்த ஜான்வி அப்படியே தொப்பென்று அங்கிருந்த சோபியாவில் அமர்ந்தாள் .அவள் அருகில் சிரிப்புடன் கெளதம் அமர அவன் தோளில் சாய்ந்து கொண்டவள் சிறிது நேரம் அமைதியாய் இருந்தாள்.அவனும் அமைதியை தத்தெடுக்க கைகள் மட்டும் அவளின் தலை முடியை வருடியபடி இருந்தது.இருவருக்கும் இந்த அமைதி ஏனோ தேவையாய் இருக்க வாய்மொழி அல்லாது மௌனத்தின் வழியாய் தங்கள் காதல் நொடிகளை உணர்ந்து கொண்டிருந்தனர் இருவரும் .
ஜான்வி "அத்து "என்றழைத்து அவனை நிமிர்ந்து பார்க்க
அவனோ "என்ன ஜானு "என்று அவள் முகத்தை பார்த்து கேட்டான் .
ஜான்வி "அடுத்த என்ன பண்ணலாம்னு இருக்க ?"என்று கேட்க
அவனோ சற்று யோசித்தவன் "சமையல் கத்துக்கலாம்னு இருக்கேன் உயிர் முக்கியம் பாரு"என்று சீரியசாக கூற அவளோ அவன் கூறிய தோரணையில் கடுப்பானவள் அவனை தள்ளிவிட்டு எழ அவள் கையை பிடித்து இழுத்து தன் மேலே விழ வைத்தவன் இடையோடு அணைத்தபடி பேசினான் "அவ்ளோ கோவம் வருதா டி உனக்கு ."என்று கேட்க
அவளோ "அப்பறோம் என்னடா நா சீரியசா கேக்குறேன் நீ என்ன வச்சு காமெடி பண்ணுற "என்று கூற