அடுத்த நாள் காலையில் அனைவரும் கிளம்பி அலுவலகத்திற்கு செல்ல ஜான்வியும் ஜீவிதாவும் ப்ரவீனும் அலுவலக பஸ் நிற்க அங்கிருந்து இறங்கி நடந்தனர் .அங்கு ஒரு பாலம் போன்ற அமைப்பு இருக்கும் அதில் சற்று தூரம் நடந்தால் subway ஒன்று இருக்கும் அதில் இடது புறம் ஏறினாள் காக்னிசண்ட் வந்து விடும்.
பேருந்து சேவை அவர்களுக்கு அந்த பாலம் வரை m மட்டும் தான் தந்திருந்தனர் .அலுவலக பஸ்கள் அங்கே தான் ஒரு இடத்தில் நிற்கும் .அங்கே இறங்கிய நண்பர்கள் வழக்கம் போல் அந்த பாலத்தில் நடக்க ஆரம்பிக்க ப்ரவீனோ முன்னாள் நடந்து சென்றுகொண்டியுர்ந்தவனை பார்த்தவன் ஜீவிதாவிடம் திரும்பி "ஏய்ய் ஜீவி அங்க முன்னாடி போற ஆள பாரேன் "என்க
ஜீவிதாவோ முன்னே பார்த்தவள் ஜான்வியை வம்பிழுக்க வேண்டி "ஆமா நம்ம ஜாங்வியோட ஆளு தான் போறாரு "என்க
ஜான்வியோ" எனக்கு தெரியாம எனக்கு எவன்டா ஆளு" என்று நிமிர்ந்து ஜீவிதாவை பார்க்க முன்னே சென்று கொண்டிருந்தவனோ இள நீல formal ஷர்டிலும் கருப்பு நிற pantilum வேக நடைகளோடு சென்று கொண்டிருக்க அவனின் பக்க வாட்டு தோற்றமே காட்டி கொடுத்து விட்டது அவன் யாரென்று .இவ விட மாட்டா போலயே என்று நினைத்த ஜான்வி எல்லாத்துக்கும் காரணம் இந்த பாடி பில்டர் என்று நினைத்து அவனின் பக்கவாட்டு தோற்றத்தை முறைக்க
ஜீவிதாவோ "என்ன மேடம் பின்னாடி நடக்குற போஸயே இப்டி பாக்குற அப்போ முகத்தை எவ்ளோ நேரம் பார்ப்ப "என்று கிண்டலடிக்க
ஜான்வியோ அவளை முறைத்தவள் "அவன் முகத்தை இப்போ வரைக்கும் ஒரு தடவ கூட நா முழுசா பாத்ததில்லை டி "என்க
ப்ரவீனோ "என்ன ஜான்வி கௌதம போய் இப்டி சொல்லிட்ட ஏதாச்சு சண்டையா ?எதுவா இருந்தாலும் சொல்லு நா பாத்துக்குறேன் "என்று நக்கலாய் கூற
அவளோ கையை தலைக்கு மேல் தூக்கி கும்பிடு போட்டவள் "நீ பண்ண வரைக்கும் போதும் டா சாமி அவன் பேரு கௌதம்னே நீங்க சொல்லி தான் எனக்கு தெரியுது."என்று கூற