33

2.1K 123 72
                                    

ரேவதி தனது மகனிற்கு ஜான்விக்கும் திருமணம் உறுதி செய்து விட்டு சென்று விட ஜான்வியோ உணர்ச்சி துடைத்த முகத்துடன் இருந்தாள் .சேகர் பணி முடிந்தது என்பதை போல் தனது நண்பனை பார்க்க செல்கிறேன் என்று வெளியே செல்ல பார்வதியோ மகளின் திருமணம் முடிவான மகிழ்ச்சியில் அவள் அருகில் அமர்ந்து அவள் தலையை வருடினார் .

பார்வதி "ஜான்வி அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டா .இப்போ தான் நீ பொறந்த மாறி இருக்கு அதுக்குள்ள உனக்கு கல்யாணம் ஆக போகுது "என்று பெற்றவரின் பூரிப்புடன் கூற ஜான்வியோ

இதற்கு மேல் தன்னை கட்டுப் படுத்த முடியாது என்று உணர்ந்தவள் அவர் கையை விலக்கி "அம்மா கொஞ்சம் tiredaa இருக்கு நா ரெஸ்ட் எடுக்குறேன் "என்று கூற

அவரும் நேற்று காய்ச்சலின் வீரியத்தால் அப்படி இருக்கிறது போல என்று நினைத்தவர் அவள் கன்னம் வருடி "சரிடா நீ தூங்கு அம்மா சாப்பிடேல உன்னை எழுப்புறேன் "என்று கூற அவளும் மௌனமாய் ஒரு தலை அசைப்புடன் மேலே சென்று விட்டாள்.அதன் பின் இரண்டு நாட்கள் செல்ல ஜான்வியின் வாழ்வு இயந்திரத்தனமாக மாறி இருந்தது .காலையில் எழுவாள் ,பெயரிற்கு உன்ன வேண்டும் என்பதற்காக உண்ணுவாள் .என்ன சாப்பிடுகிறாள் என்று கூட உணராது தான் உண்ணுவாள் அலுவலகம் சென்று வேலை பார்ப்பாள் மீண்டும் உண்ணுவாள் உறங்குவாள் .ஓயாது பேசுபவள் பேசுவதையே மறந்திருந்தாள்.

முதலில் இதை காய்ச்சலின் அசதி என்று நினைத்த பார்வதி இரண்டு நாட்கள் ஆனபின்னும் அவள் அப்படியே முகத்தில் வெறுமை தாங்கி இருப்பது மனதின் உள்ளே குழப்பத்தை உண்டு பண்ணியது .அவர் கண்ட அவரின் புதல்வி இது அல்லவே!சதா வாயடித்துக் கொண்டு ,அவர் அடுப்படியில் வேலை செய்தால் அவரின் பின்னே நின்றுகொண்டு ஏதாவது குறும்பு செய்து கொண்டு ,ஆதியுடன் வம்பளந்து கொண்டு இருப்பவள் இன்றோ தனது அறையே கதி என்று இருக்கிறாள்.தானாக பேசினாலும் ம்ம் ம்ம்ஹும் என்று இரண்டு பதிலுடன் முடித்துக் கொள்கிறாள் ,திடீரென்று காரணமே இல்லாமல் கண்களில் அவளறியாது கண்ணீர் வழிய அமர்ந்திருக்கிறாள் ,காலையில் எழுந்து வரும் பொழுது முகம் எங்கும் இரவெல்லாம் அழுததை போல் வீங்கி ,ரத்த சிவப்பான கண்களுடன் எழுந்து வருகிறாள் .திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் இப்படியா இருப்பாள் ?என்று நினைத்து குழம்பினார் ,அவளிடம் கேட்டாலும் "நல்ல தான்மா இருக்கேன் "என்று கூறி அத்துடன் அவ்விடம் விட்டு அகன்று விடுகிறாள் .என்ன ஆனது ஏன் மகளிர்க்கு என்று நினைத்தே குழம்பிக் கொண்டிருந்தார் பார்வதி.

தோழனா என் காதலனாWhere stories live. Discover now