அடுத்த நாள் காலை விரைவாகவே எழுந்த ஜான்வி குளித்து முடித்து வெளியே வர அப்பொழுது தான் ஆவலுடன் தங்கி இருந்த அவளின் சகோதரி முறையுள்ள பெண்கள் அனைவரும் எழுந்தனர் .பின் வெளியே வந்தவள் தனது அன்னையை தேடி செல்ல அவரோ பின் கட்டில் நின்று இரண்டு மூன்று பேரை வேலை ஏவிக்கொண்டிருந்தார் .
அவரின் தோளில் சுரண்டியவள் "அம்மா "என்க
அவரோ "என்ன ஜான்வி "என்று கேட்க
அவளோ "பசிக்குதும்மா "என்க
அவரோ சுற்றி முற்றி பார்த்தவர் "காலைல அவங்க அஸ்தியை கரைச்சுட்டு வர வரைக்கும் சாப்பிட கூடாது டி "என்க
அவளோ அழுவதை போல் முகத்தை வைத்தவள் "நேத்து காலைல இருந்து ஒழுங்கா சாப்பிடல பசிக்குது "என்று கூற அவரிற்கு எதுவும் செய்ய முடியாத சூழல் .மகள் பசி பொறுக்க மாட்டாள் தான் ஆனால் அனைவரும் பசியோடு இருக்க அவளிற்கு மட்டும் எப்படி உணவை வாங்கி தருவது? என்று அவர் விழி பிதுங்கி நிற்க ஜான்வியி பின் இருந்து ரேவதியின் குரல் கேட்டது "வதினா குழந்தை எவ்வளோ நேரம் சாப்பிடாம இருப்பா ?"என்க
ஜாங்வியோ ஒரு வித சங்கடத்துடன் திரும்பினாள் அவர் புறம் .தவறாக நினைத்துவிடுவாரோ என்று .ரேவதி "வதினா அபி இப்போ தான் சாப்பாடு சின்ன பிள்ளைங்களுக்கெல்லாம் வாங்க போறான் ஜான்வியை அவன் கூட வேணா போய் சாப்டுட்டு வர சொல்லுங்களேன் "என்க
ஜான்விக்கு தெளிவாய் புரிந்துவிட்டது தனது அத்தையின் எண்ணம் .ஜான்வி "இல்ல அத்தய்யா எனக்கு பசிக்கல "என்க
அவரோ"அட சும்மா இரு ஜான்வி "என்றவர் அப்புறமாய் சென்று கொண்டிருந்த அபிஷேக்கை அழைத்தார் "அபி இக்கட ரா (இங்க வா )"என்க
அபியோ அவர்கள் அருகில் வந்தவன் ஜான்வி அங்கு நிற்க கண்டு அவள் புறம் பார்வையை திருப்பாத கவனமாய் தவிர்த்தவன் தன் அன்னையிடம் "என்ன அம்மா ?"என்க
அவரோ "அபி ஜான்விக்கு பசிக்குதாம் நீ சாப்பாடு வாங்க தான போற. அப்டியே அவளை அழைச்சுட்டு போய் சாப்பிட வச்சுட்டு கூட்டிட்டு வா "என்க