அலுவலகம் முடித்து ஜீவிதாவுடன் ஜான்வி அவளின் அறைக்கு வந்திருந்தால் .வரும் வழி நெடுகிலும் காலையில் கௌதமை பார்த்த பொழுது நடந்த சம்பவங்களை தான் கூறியபடி வந்துகொண்டிருந்தாள் .அவர்கள் இருவரும் ஒரு சிரிப்புடன் அவள் விவரித்து கூறும் அழகை பார்த்தபடி வந்தனர் .
பின் அறைக்கு வந்ததும் ஜீவிதா குளிக்க செல்ல ஜான்வி அமர்ந்து ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தாள் அப்பொழுது அவளின் போனிற்கு அழைப்பு வந்தது .யாரென்று பார்க்க அவளின் அன்னை தான் அழைத்திருந்தாள். எப்பொழுதும் காலையில் ஒரு முறை குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் அரை மணி நேரம் பேசி விடுவாள் அதன் பின் அவர்களும் அழைக்க மாட்டார்கள் .
இன்று என்ன புதியதாய் என்று நினைத்தவள் அழைப்பை ஆர்வமுடன் எடுத்து காதில் வைத்து "அம்மா என்னம்மா இப்போ கால் பண்ணிருக்க ?"என்று கேட்க
பார்வதியோ "அது கண்ணா உன் அத்த வந்துருந்தாங்கம்மா இன்னைக்கு காலைல "என்க
ஜான்விக்கு கொஞ்சம் அவள் அத்தையின் மேல் அத்தனை ஒட்டுதல் இல்லாத காரணத்தால் சற்று குரலில் இருந்த துள்ளல் குறைய "ஓஹ் சரிமா என்ன விஷயமா வந்தாங்க ? "என்க
அவரோ "அது...அவங்க பையனுக்கு உன்ன பொண்ணு கேட்டாங்கடா .அப்பா உன் விருப்பத்தை கேக்க சொன்னாரு "என்க ஜாங்விக்கோ இந்த உலகமே ஒரு நிமிடம் நின்றுவிட்டதை போல் இருந்தது .ஏனோ அனுமதி இல்லாமல் கௌதமின் உருவம் கண் முன் வந்துபோக அவளின் அன்னை மூன்று முறை போனில் அவள் பெயரை உரக்க கத்திய பின்னே தனது சிந்தனையில் இருந்து வெளி வந்தாள் .
பார்வதி "என்ன டா என்ன சொல்றது உனக்கு ஓகேவா ?"என்க
ஜான்வியோ "அது அம்மா எனக்கு இப்போ தான் படிப்பு முடுஞ்சுருக்கு இப்போ கல்யாணம் வேணாம் அம்மா "என்க
அவரோ சிறிது நேரம் அமைதியாய் இருந்தவர் "அப்போ ஒரு வருஷம் அபி காத்திருக்க தயார்னா உனக்கு சம்மதமா கண்ணா ?"என்க
அவள் என்ன கூறுவாள் இது வரை திருமணம் என்பதை பற்றி சிறிதும் யோசிக்காமல் இருந்தவள் இப்பொழுது மன சஞ்சலத்தில் வேறு இருக்க என்ன கூறுவதென்று தெரியாமல் இருந்தாள்.