அந்த இரண்டு நாட்களும் ஜான்விக்கு ரணக்கொடூரமாய் சென்றது என்று தான் கூற வேண்டும் .ஒவ்வொரு முறையும் அவளை பார்க்கும் பொழுதெல்லாம் அபியின் புராணத்தை பாடியே அவள் காதுகளில் ரத்தம் வர வைத்தார் அவளின் அத்தை .
எப்பொழுதடா அந்த இரண்டு நாள் முடியும் என்றிருந்தது அவளிற்கு .ஆதியோ இதை கண்டு கொண்டிருந்தாலும் எதுவும் செய்ய முடியாத சூழலில் இருந்தான்.அவனை ஜானு தான் அடக்கி வைத்திருந்தாள் வந்த இடத்தில் பிரச்னை செய்யாதே என்று .கௌதமிற்கு இந்த இரண்டு நாட்களும் ஏனோ நகருவேனா என்றிருந்தது .எப்பொழுதும் போல் எழுகிறான் வேலைக்கு செல்கிறான் வருகிறான் படிக்கிறான் எனில் என்னவோ ஒன்று வாழ்வில் குறைவதை போலவே உணர்ந்தான் .அன்றும் அவன் வேலை முடித்து அவன் வீடு இருக்கும் சந்திற்குள் வந்து கொண்டிருக்க ஒரு hydrogen பலூன் அவன் வண்டி முன்னே பறந்து வர அதை துரத்தியபடி ஓடி வந்தாள் ஒரு பதினான்கு வயது சிறுமி .
சட்டென்று பிரேக் போட்டவன் திட்டுவதற்காக திரும்ப அவளோ அந்த ஹைட்ரஜன் பலூனை பிடித்ததை ஏதோ பெரிய சாதனை போல் நினைத்து சிரித்துக்கொண்டிருந்தாள்.அவள் பின்னோடு ஓடி வந்தாள் அவளின் அக்கா "ஐயோ பாப்பு இத்தனை வயசுல ஹைட்ரஜன் பல்லூன் வாங்கி தானு உசுர வாங்கிட்ட வாங்குனதை பத்தரமாவாச்சும் பிடிச்சியா ?இப்படியா ரோட்டுல ஓடி வரது?"என்று அவளை அதட்ட
அவளோ "ஈஈ பறந்திருருச்சு ரியா அக்கா "என்று அவளை செல்லம் கொஞ்ச இருவரையும் கையை கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தான் கௌதம் .அவனிற்கு அந்த சிறுமியின் முகத்தில் இருந்த குறும்பு அவனின் ஜானுவை நினைவு கூற புன்னகையுடன் அவளை பார்க்க அப்பொழுதே அக்கா தங்கை இருவரும் ஒருவனின் வண்டியை மறித்து தாங்கள் பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்தனர் .
இருவரும் ஒரே நேரத்தில் அசடு வழிய கௌதமோ இருவரையும் ஒற்றை விரலால் இங்கு அழைத்தான் .பிரியா "பாப்பு பாக்கவே terror பீஸ் மாறி இருக்கான் போகணுமா ?"என்க