இரண்டு வருடங்கள் இமைப்பொழுதில் முடிந்து விட்டது .
திவ்யாவிற்கு அருண் என்பவருடன் திருமணம் நடந்திருக்க பிரவீனிற்கும் ஸ்வேதாவிற்கு நிச்சயம் நடந்திருந்தது.ஸ்வேதாவின் அத்தனை வருட பொறுமைக்கும் எதிர்பார்பற்ற காதலுக்கும் பரிசாய் பிரவீன் அவளை தன உயிரினும் மேலாய் காதலிக்க துவங்கி விட்டான் .வாழ்வு என்றும் ஒரு குட்டை போல் தேங்கி விடுவது இல்லையே ஒன்றை நாம் இழந்தால் நிச்சயமாக கடவுள் நமக்கு அதை விட நல்ல பொக்கிஷம் ஒன்றை தர இருக்கிறார் என்று தான் அர்த்தம் என்பதை ஸ்வேதாவின் வரவின் பின் உணர்ந்து கொண்டான் பிரவீன் .
ஆதித்யன் மற்றும் ஜீவிதாவின் அன்பின் அடையாளமாய் இருவருக்கும் ஒரு வருடத்திற்கு முன் ஆண் மகவு பிறந்திருந்தான் .அவனிற்கு ஹர்ஷவர்தன் என்று பெயர் சூட்டி இருந்தனர் .ஆதி சேஷன் இன்ஜினியரிங் முடித்து காக்னிஸன்ட்டிலேயே வேலைக்கு சேர்ந்து விட்டான்.வேலை வாங்கிய கையோடு ராகவியும் தானும் விரும்பும் விஷயத்தை வீட்டில் கூறியவன் இருபத்தைந்து வயதாகும் தருவாயில் திருமணம் செய்வதாய் கூறி விட்டான் .
கௌதமின் தாயார் அவன் தன்னுடன் இருக்கும் வரை அவன் அருமை புரியாது இருந்தவர் அவன் அவர்களை விட்டு விலகிய நேரம் தான் அவனின் உணர்வுகளையும் அவனிற்கு தான் செய்த துரோகங்களும் மனதை உறுத்த அவன் முகம் பார்க்க வெட்கியவர் இப்பொழுது கௌதமின் தந்தை அவனை காண செல்லும் பொழுதெல்லாம் தடை பிறப்பிப்பதை நிறுத்தி இருந்தார் .
அதுவுமின்றி மருமகளின் சேட்டைகளை கணவனின் மூலம் கேட்டு தெரிந்து கொள்பவர் ஜான்வியின் மேல் தனி ஒரு பாசம் வைத்திருந்தார்.எனில் ஒட்டி உறவாடவும் இல்லை எட்டி தள்ளி நிறுத்தவும் இல்லை .தாமரை இல்லை மேல் நீர்த்துளி போல் கெளதம் மற்றும் அவருக்குமான உறவு தொடர்ந்தது .காலம் அனைவரையும் மாற்றும் வல்லமை கொண்டது என்பது உண்மை தான் போல.ஜான்வியின் தந்தை இன்றும் தனது வறட்டு பிடிவாதத்தை பிடித்து வைத்தபடி தான் அமர்ந்திருக்கிறார் எனில் அந்த பிடிவாதத்தை அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைக்கும் நாளும் வந்தது