கெளதம் சற்று பதற்றதுடன் காத்திருந்தான் ஜான்வியை சந்திக்க போகும் தருணத்தை எதிர்நோக்கி .திருமணம் முடிந்து அனைவரும் உணவுண்ண செல்ல ஜான்வியோ அவனை முறைத்தபடி மேலே மொட்டை மாடிக்கு சென்றாள்.அவள் மாடிக்கு செல்வதை கவனித்தவன் கைக் கடிகாரத்தை பார்க்க அது சரியாய் பன்னிரண்டு என்று காட்டியது .
கௌதமோ ஆதியின் புறம் திரும்பி பாவமாய் பார்க்க ஆதியோ "அப்டி பாக்காதீங்க பாவா .சிரிப்பா வருது போங்க மேல "என்று கூறி அனுப்பி வைத்தான் .
கெளதம் மனதில் "நான் பாட்டுக்கு சிவனேனு இருந்தேன் .என்ன இப்டி கூட்டிட்டு வந்து அவகிட்ட நல்லா கோர்த்து விட்டுட்டியே டா பாவி "என்று நினைத்தவாறு இஷ்ட தெய்வம் அனைத்தையும் வேண்டியபடி மேலே சென்றான் .
மொட்டைமாடியின் கதவு திறந்து இருக்க மேலே சென்ற பின் அந்த கதவை ஆதியின் அறிவுரை படி சாற்றி விட்டான் கெளதம் . ஜான்வி எங்கே என்று கண்களால் அவன் தேட அங்கே மொட்டை மாடியின் ஒரு ஓரத்தில் சுவற்றின் அருகில் அந்த புறம் இருந்த தென்னந்தோப்பை வெரித்தவாறு கை கட்டி நின்றிருந்தாள் அவள் .
ஊதா நிறத்தில் வெள்ளி நிற ஜரிகை வைத்த பட்டு புடவை அணிந்திருந்தாள்.அவளின் நிறத்திற்கு அந்த வண்ணம் அவளின் நிறத்தை மேலும் எடுப்பாக அழகாக காட்டியது .இடையை தொட்டிருந்த அடர்த்தியான கூந்தலை ஒற்றை சென்டர் கிளிப்பில் அவள் அடக்கி மீதத்தை விரித்து விட்டிருக்க அங்கு அடித்த மிதமான தென்றல் அவள் கூந்தலை வருடி சென்றது .சற்றே பூசினார் போல் இருக்கும் அவள் தேகம் வெகுவாக இளைத்து இருந்தது .முகத்தில் இயல்பாய் இருக்கும் குறும்பு பொய் இறுக்கம் குடி இருந்தது .இலக்கே இன்றி வெறித்துக் கொண்டிருந்தவளின் அழகு அவள் முகத்தில் இருந்த வெறுமையால் வெகுவாக குறைந்தார் போல தெரிந்தது அவனிற்கு .
மனமும் வலித்தது எப்படி இருந்தவளை தனது செயல் இப்படி மாற்றி விட்டதே என்று .முயன்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் அருகில் சென்று நின்றவன் அவள் தோளில் கை வைத்து "ஜானு "என்று அழைத்த மறுநொடி தன் கன்னத்தை கையால் தாங்கி இருந்தான் கெளதம்.அவன் இடது கன்னத்தை பலமாக தாக்கி இருந்தது அவனின் ஜானுவின் பூங்கரம் .