1

6.2K 145 140
                                    

பங்குனி மாதம் துவங்கி கிழக்கில் சூரியன் தன் வரவை உலகிற்கு உணர்த்தி மேகமெனும் தேரினிலே பவனி வந்துகொண்டிருந்தான்.

அந்த ஏகாந்த காலை வேளையின் இனிமையோடு கோயம்பத்தூரில் பீளமேடு பகுதியில் அமைந்திருந்த அந்த இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டில் வரவேற்ப்பறையில் இளையராஜாவின் மெல்லிய கானங்கள் மேலும் இனிமை சேர்க்க அதன் முன்னே இசையின் இன்பத்தில் அமிழ்ந்தவாறு பேப்பர் படித்துக்கொண்டிருந்தார் அந்த வீட்டின் தலைவர் சேகரன் .

அவரின் மனைவி பார்வதி கொண்டு வந்து கொடுத்த காபீயை வாங்கியவர் மணியை பார்க்க அதுவோ எட்டு என்று காட்டியது .அவரிடம் coffeeயை வாங்கியபடி அவரை பார்த்தவர் "பாரு இன்னும் பசங்க எந்திரிக்கலயா ?"என்க

அவரோ "லேது பாவா (இல்லங்க ).என்னனு போய் பாக்குறேன் "என்று கூறியவர் அந்த வீட்டின் வரவேற்பறையை ஒட்டியுள்ள படிக்கட்டில் ஏறி இடதுபக்கம் இருந்த கதவில் கை வைக்க அதுவோ தானாய் திறந்து கொண்டது .

உள்ளே தலையில் ஈரம் சொட்ட சொட்ட track பாண்ட் shirtல் ஒடிசலான தேகத்துடன் மாநிறத்தில் ஆறடி உயரத்தில் நின்றுகொண்டிருந்தவனை பார்த்து புன்னகைத்த பார்வதி "சின்னு சீக்ரம் எந்திருச்சுட்டியா?"என்க

அவனோ "அவுனு ம்மா ஈ ரோஜு நேனு group studies கி எள்துநானம்மா(ஆமா அம்மா இன்னிக்கு நா group studiesku போறேன்) அதான் சீக்ரம் எந்திருச்சேன்"என்க

அவரோ அவனை பார்த்து புன்னகைத்தவர் "டேபில்லோ காபி உந்தி எடுத்துக்கோ "என்றவர் அடுத்த அறைக்கதவை திறக்க தலை முதல் கால் வரை முழுவதும் போர்த்திய நிலையில் படுத்திருந்தது ஒரு உருவம் .

அதன் அருகில் நெருங்கியவர் அவளின் தோளை தொட்டு உசுப்பியவர் "கண்ணா எந்திரி டைம் ஆச்சு "என்க அவர் அழைக்க அழைக்க அந்த உருவமோ புரண்டு புரண்டு படுத்தாதே ஒழிய எந்திரிக்க வில்லை .

சோர்ந்தவர் கடைசி ஆயுதமாய் தெலுங்கை கையில் எடுத்தார் "நுவ்வு எப்புடு நா மாட்டா வினதம் லேது "(நீ எப்பொழுதும் எனது பேச்சை கேட்பதே இல்லை )என்று துவங்க

தோழனா என் காதலனாWhere stories live. Discover now