அடுத்த இரண்டு நாட்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறக்க கவுதம் அதன் பின் ஜான்வியை அழைக்கவே இல்லை .ஒவ்வொரு முறை அலை பேசி சிணுங்கும் பொழுதும் அவன் அழைத்திருப்பானோ என்று எண்ணி ஆர்வத்துடன் பார்ப்பவளிற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் .அன்று இரவு வரவேற்பு என்றிருக்க அடுத்த நாள் காலையில் திருமணம் இருந்தது .
திருமணம் கோவையிலேயே வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டிருக்க.
ஜீவிதாவிற்கு அதிர்ச்சி கொடுப்பதற்காக பிரவீன் மற்றும் ஜான்வி ஆதித்யாவுடன் இணைந்து ஒரு சிறிய நடனம் ஆடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.ஆதவன் பகலெல்லாம் உலகெங்கும் தனது ஒளியை பரப்பி அயர்ந்து ஆழியவள் மடி சேர அங்கே இரவை பகளாக்க முயலும் வண்ண விளக்கொளியிலும் பௌர்ணமி நிலவொளியிலும் அந்த மண்டபமே மூழ்கியிருந்தது .
வேலை பளு காரணமாக மாலை ஆறு மணிக்கு கிட்ட தட்ட வரவேற்பு துவங்கும் நேரம் கோயம்பத்தூர் வந்து சேர்ந்த கெளதம் நேராய் மண்டபத்திற்கு செல்ல வாசலில் நின்றிருந்த பிரவீன் அவனை அடையாளம் கண்டு கொண்டவன் புன்னகையுடன் "வாங்க ப்ரோ என்ன இவ்ளோ லேட்டா ?"என்று கேட்க
அவனோ சிரிப்புடன் "கொஞ்சம் வேலை ஜாஸ்தி பிரவீன் அதான் "என்று கூற அவன் தோளில் பையுடன் களைப்பாக இருந்த முகத்தையும் மீறி அவன் கண்களில் இருந்த தேடலையும் கண்டு கொண்டான் .கெளதம் பேசுவது ப்ரவீனுடனாய் இருந்தாலும் கண்கள் என்னவோ அவனின் ஜானுவை காண தான் அலைந்து கொண்டிருந்தது.அவன் தவிப்பை உணர்ந்து சிரித்த பிரவீன் "வாங்க ப்ரோ ரூம் காட்டுறேன் அங்க fresh ஆகி சீக்கிரம் கீழ வாங்க "என்று கூறி மேலே அழைத்து சென்றான் .
அவன் அழைத்து செல்லுகையிலேயே யாரோ கீழே அவனை அழைக்க கௌதமிடம் திரும்பியவன் "ப்ரோ செகண்ட் ரூம்ல போய் change ஆகிக்கோங்க "என்று கூறி விட்டு சென்று விட இடது புறம் இருந்த இரண்டாவது அறையை திறக்க அங்கே அவன் முன் சட்டை இன்றி நின்றுகொண்டிருந்தான் ஆதி சேஷன்.
கௌதம் அவனை நோக்கி புன்னகைத்தவன் "இங்க change பண்ணிக்கவா ப்ரோ ?"என்று கேட்க