20 | சம்மதம்

120 21 15
                                    

ஹுமைராவுக்கும் மினாவுக்கும் முன்னால் வெட்கப்பட்வாறே நின்று கொண்டிருந்த ஜாஸியாவை அன்புக்கரங் கொண்டழைத்து அருகே அமர வைத்துக் கொண்டார் மினா.

சாதாரணமான விடயங்ளைப் பற்றியே அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் ஹாஷிம் ஜாஸியாவை அழைக்கும் குரல் கேட்டது.

அவளது உம்மம்மா தான் அவளை ஆண்கள் இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார்.

குனிந்த தலை நிமிராது சென்று நின்றவள் ஒரேயொரு முறை மட்டும் கண்களைச் சுற்றி அங்கிருந்த அனைவரையும் பார்த்துக் கொண்டாள்.

மீண்டும் தலை தாழ்ந்து புவி நோக்கியது. "இது தான் என் கடைசி மகள் ஜாஸியா" என்று ஹாஷிம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

லுக்மானுக்காே தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் தம்பி நிலை கொள்ளாமல் நெளிவது நன்றாக விளங்கியது. சிரிப்பை கடினப்பட்டு அடக்கிக் கொண்டான்.

ஜாஸியாவுக்கு ஏற்கனவே பேசி வைத்திருந்த மாப்பிள்ளைக்கு என்ன ஆனது என்பதைத் தெரிந்து கொள்ளவே வேண்டும் போலிருந்தது அய்யாஷுக்கு.

அவர் அதைக் கேட்க முன்பே ஹாஷிம் அதைப் பற்றிக் கூறி விட்டார். மார்க்க விடயங்களைக் கடைப்பிடித்து நடப்பதில் ஜாஸியா காட்டும் ஆர்வமும், ஆரம்பத்திலிருந்தே நாஸிரின் மீது வெறுப்புடன் நடந்து கொண்டதும் என அனைத்தையும் கூறினார்.

அதையிட்டு ஜாஸியாவின் நடத்தைகளை எடை போட்டுக் கொண்டான் ஹாரூன். அவள் எதிரிபார்த்த கனவு தேவதையாகவே அவளிருந்தது அவனது ஆனந்தத்தை எல்லை கடக்கச் செய்தது.

'அல்ஹம்துலில்லாஹ்!' என்ற புகழ் அவனறியாமாலே அவனது வாயிலிருந்து வெளியேறியது.

"நீ எப்படிப்பட்ட நடத்தையையுடையவனாக இருக்கிறாயோ, அதே போலத் தான் உனது வாழ்க்கைத் துணையின் நடத்தைகளும் அமையும்" அவன் எப்போதோ எங்கோ வாசித்த வரிகள் வந்து சிந்தையைத் தொட்டுச் சென்றன.

தனது எதிர்கால மனைவி ஒரு ஸாலிஹான பெண்ணாக இருக்க வேண்டுமென்ற காரணத்தினாலே நிறையப் பாவங்களிலிருந்து அவன் கடினப்பட்டுத் தவிர்ந்து கொண்டது ஞாபகத்துக்கு வந்தது.

நிழல் கொடுத்த மரம்✔Where stories live. Discover now