19 | வருகை

101 19 10
                                    

யஹ்யா சொன்ன செய்தியில் அகமகிழ்ந்தாலும் அவனுக்குள் பல கேள்விகள் குடைந்து கொண்டிருந்தன.

ஏற்கனவே திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்ன ஜாஸியாவின் தந்தை அவனை அழைத்த இப்படியொரு சங்கதியைக் கூறினால் மகிழ்ச்சியடைவதா? இல்லையா? என்றே அவனுக்குப் புரியவில்லை.

எதுவானாலும் பொறுமையாகவே கையாளலாம் என நினைத்துக் கொண்ட ஹாரூன் இஸ்திஹாராத் தொழுகையை நிறைவேற்றி விட்டுத் தனது வேலைகளில் ஈடுபடலானான்.

அன்றிரவு வீட்டுக்குச் சென்றவனுக்கு மனதினுள் சஞ்சலம் நிரம்பியிருந்தது. தனது தந்தையிடம் இதைப் பற்றிப் பேசி விடுவதென்று நினைத்துக் கொண்டாலும் எப்படிப் பேசுவது என்று தான் அவனுக்குப் புரியவில்லை.

இரண்டு தெரு தள்ளி வசிக்கும் தனது தமையனுக்கு அழைத்தவன் மெதுவாக அவனிடம் விடயத்தைக் கூறினான்.

ஹாரூனுக்கு ஆதரவாக சில வார்த்தைகளைப் பேசியவன் தந்தையிடம் கதைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

அதன் பின்னர் தான் ஹாரூனுக்கு சீராகவே மூச்சு விட முடிந்தது. நிம்மதியாகவும் உறங்கிப் போனான்.

அடுத்த நாள் காலையிலேயே வீட்டுக்கு வந்திருந்த ஹாரூனின் சகோதரன் லுக்மான், அய்யாஷிடமும் மினாவிடமும் விடயத்தைக் கூறினான்.

ஹாரூனின் திருமணத்துக்காக அவர்கள் அவசரப்படவில்லை. இது வரை எந்த முயற்சியும் செய்யவுமில்லை. அவனுக்கு இப்போ தானே இருபத்தாறு வயது.

ஆனால் ஒருவர் தானாக முன்வந்து தனது மகளுக்காக அவனை வரன் கேட்டிருக்கையில் அதைப் பற்றி சிந்தித்துப் பார்த்தார் அய்யாஷ்.

ஹாரூனை அழைத்து அவர்களது குடும்பத்தைப் பற்றி அவனறிந்தவற்றைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

ஹுமைராவுக்கும் இதைப் பற்றித் தெரிவிக்கப்பட, ஏற்கனவே ஜாஸியாவை அறிமுகமானதால் அவர் உடனே பச்சைக் கொடி காட்டினார்.

நிழல் கொடுத்த மரம்✔Where stories live. Discover now