ஜாஸியா கண்ணயர்ந்து விட்டதையறிந்த யமீனா நிஸாவுடன் கதைக்க எண்ணி முன் மண்டபத்தை நோக்கிச் சென்றாள்.
"மம்மீ!" என்று அழைத்தவாறே வந்த மகளைக் கேள்விக்குறியாக நோக்கிய ஹாஷிம் என்னவென்று கேட்டார்.
"அப்போ ஏதோ சொல்ல வந்திங்களே மகள்?" என்று கேட்டார்.
"அது தான்... டாடி! மம்மி! இந்தக் கல்யாணத்த நிறுத்திடுங்க ப்லீஸ்" என்றாள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தவாறு.
"என்ன? உனக்கும் என்னாச்சு?" என்று எழுந்தார் நிஸா.
"இல்ல மம்மி. எங்க எல்லோருக்கும் தெரியும் ஜாஸியாவைப் பற்றி. நாஸிரும் ஜாஸியாவும் கொஞ்சம் கூட ஒத்து வர மாட்டாங்க. அப்படியிருந்தும் அவரைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள சொல்லி அவளைக் கட்டாயப்படுத்தறது நியாயமா? அப்படியே நடந்தாலும் அவங்க நிம்மதியா ஒத்து வாழ்வாங்களாங்கிறது சந்தேகம் தான? எதுக்கு..."
"அது சரி யமீனா... ஆனாலும் கொஞ்சம் நாள்ள ஒத்து வாழப் பழகிடுவாங்க" இது ஹாஷிம்.
"அதைத் தான் நானும் சொல்றேன்" என்று ஒத்துப் பாடினார் நிஸா. "நாஸிரைப் போல தங்கமான பிள்ளையொன்று தேடுறது கஷ்டம். அது ஜாஸியாவுக்குத் தான் புரியலன்னா நீயுமா?" என்றார் கடுப்புடன் ஆனால் சற்று பதற்றத்துடன்.
"ஐயோ.. என்ன மம்மி நீங்க? அவர் தங்கமான பிள்ளையோ வெள்ளியான பிள்ளையோ... ஜாஸியா நாஸிருடன் ஒப்பிடும் போது மாணிக்கம் தான். இப்ப பாருங்க நாங்க யாரும் அவள் சொல்றத காது கொடுத்துக் கேக்கவேயில்ல. எல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு சரி வரும்னு சொல்லி சொல்லியே வந்தோம். அவளும் அதையே யோசிச்சு யோசிச்சு மனசுடைஞ்சுட்டாள்"
இப்போது ஹாஷிம் மற்றும் நிஸாவின் முகங்களில் யோசனையின் இரேகைகள் படர்ந்தன.
"என்கிட்ட சொல்லி அழுதாள் மம்மி. அதுக்கு மேல தாங்காம தான் மயங்கிட்டாள்" என்றதும் நிஸாவுக்கும் அழுகை வந்தது.
அவர் யமீனாவின் வார்த்தைகளிலுள்ள உண்மையை உணர்ந்தாரோ என்னவோ நிலத்தையே வெறித்துக் கொண்டிருந்தார்.
YOU ARE READING
நிழல் கொடுத்த மரம்✔
Spiritualமுஸ்லிம்கள் என்று பெயருக்குச் சொல்லிக் கொண்டாலும் இஸ்லாமியச் சூழல் மருந்துக்கும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்றாவது மகள் ஜாஸியா. இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கடைப்பிடிப்பதற்காக வீட்டினரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தன்னாலான எல்லா முயற்சிகளையும்...