12 | அதிர்ச்சி

110 21 19
                                    

அன்றிரவு ஹாஷிம் வர முன்பே சமைத்து வைத்து விட்டு தனதறைக்குள் சென்று முடங்கிக் கொண்டார் நிஸா.

ஜாஸியா சென்று பேச்சுக் கொடுத்துப் பார்த்தும் வெறும் ஒற்றைப் பதிலுடன் ஒதுங்கிக் கொண்டார்.

மாலை நேரத்தில் அந்த மூன்று இளைஞர்களும் ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு வருவதாகக் கூறி வெளியே சென்றது அவளுக்கு நல்லதாகப் போய் விட்டது.

ஒருவருமில்லை என்ற சுதந்திரத்தில் முன் மண்டபத்தின் சோபாவில் அமர்ந்து கொண்டு பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தாள்.

வழமை போல இரவு ஹாஷிம் வீட்டுக்கு வந்ததும் உணவைப் பரிமாற ஆயத்தமானாள் ஜாஸியா.

அந்த மூன்று இளைஞர்களும் வந்ததுமே அனைவருக்கும் சேர்த்து  உணவை வைக்குமாறு ஹாஷிம் கூறி விட்டார். 

எனவே, அது வரை அன்று பிழையாக வரைந்து திட்டு வாங்கிய வரைபடத்தை மீளத் திருத்தி வரைந்து கொண்டிருந்தாள்.

அதற்குள் அங்கு வந்த நிஸா நான்கு பேருக்கு உணவைப் போட்டு மேசையில் மூடி வைத்து விட்டுத் தானும் உண்டு விட்டுச் சென்றார்.

இதையொன்றும் ஜாஸியா அறிந்திருக்கவில்லை. அழைப்பு மணியையடுத்து கதவு திறக்கும் ஓசை கேட்டதும் உணவை வைக்க ஆயத்தமாகி திரைச்சீலையினூடாக எட்டிப் பார்த்தாள்.

ஆனால் எதிரிபாராத விதமாக நாஸிர் தான் வந்திருந்தான். அவளுக்கு ஏற்கனவே வெறுப்பு விதை தூவி முறைத்திருந்த இடத்தில் பூ வாளியால் தண்ணீர் ஊற்றுவது போலிருந்தது.

திரும்பிப் போக எத்தனித்தவள் மேசையில் நேர்த்தியாகப் போட்டு மூடி வைத்திருந்த உணவையும் கவனித்து விட்டு ஒரு புன்னகையுடன் சென்றாள்.

நாஸிரும் ஷாஷிமும் பேசிக் கொள்வது அவளுக்குக் கேட்காமலில்லை. ஹாஷிம் சிரமப் பட்டு ஜாஸியாவைப் பற்றிப் பேசாமலிப்பதும் அவளறிந்ததே.

ஒரு பேச்சுக்காக அவனையும் ஹாஷிம் சாப்பிட்டு விட்டுப் போகும் படி கூற, மறுக்காமல் அவனும் ஒப்புக் கொண்டான்.

நிழல் கொடுத்த மரம்✔Where stories live. Discover now