இன்று நடந்தவற்றை நினைத்தவாறு சமையல் கட்டில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தவளது சிந்தனை இரண்டு திங்கள் பின்னோக்கி நகர்ந்தது.
ஜாஸியா
அவளுக்கு இருபத்தைந்து வயது.
சாதாரண உயரம்.
ஒல்லியான தோற்றம்.
மாநிறத்திலும் குறைந்த ஒரு நிறம்.
ஒரு ஆடை அலங்கார வடிவமைப்பாளராகத் தனது தொழிலைச் செய்து வருகிறாள்.
நேரம் கிடைக்கும் போது மணப்பெண்களுக்கு மருதாணி அலங்காரமும் போடுவாள்.
வீட்டில் மூன்றாவது பிள்ளை. செல்லப் பிள்ளையும் கூடவே. இரண்டு மூத்த சகோதரிகளும் திருமணம் முடித்து அதே வீதியில் தான் வசித்து வருகின்றனர்.
அவளது தாய் ஒரு ஆசிரியை. தந்தை ஒரு வன்பொருள் கடை முதலாளி.
சிறு வயதிலிருந்தே ஒரு குறையுமில்லாது பாசத்தோடு சீராட்டிப் பாராட்டி வளர்க்கப்பட்டவள்.
எனவே, அவளுக்குப் பிடிவாதம் அதிகம் தான். அவளது இரு சகோதரிகளும் இதை அறிந்து வைத்திருந்ததால் அவளுக்காக விட்டுக் கொடுத்தே வாழ்ந்தனர் என்று சொல்லலாம்.
அவளுக்கு வயது வந்து விட்டது எனறுணர்ந்த அவளது பெற்றோர் அவளுக்காக மாப்பிள்ளை தேடும் படலத்தை ஆரம்பித்தனர்.
ஆரம்பித்தனர் என்றும் சொல்ல முடியாது. நீண்ட நாட்களுக்கு முன்னரே தேடி வைத்திருந்த மாப்பிள்ளையை இவளது தலையில் கட்ட முடிவெடுத்தனர்.
அந்த விடயம் அவளுக்கும் அறிவிக்கப்பட்டது. தனது கனவுகளின் நாயகனை அவள் தனது கற்பனையில் எப்படியெல்லாம் வரைந்து தீட்டி வைத்திருந்தாளோ, அவையெல்லாம் கண் முன் வந்து போயின.
அதே கனவுகளுடன் தான் அவன் பெண் பாக்க வரும் போதும் அவள் புன்னகை பூசிய பூவதனத்துடன் காத்திருந்தாள்.
ஆனால் நடந்ததோ அவள் எதிர்பார்த்ததற்கு நேர் மாறான விடயம் தான்.
YOU ARE READING
நிழல் கொடுத்த மரம்✔
Spiritualமுஸ்லிம்கள் என்று பெயருக்குச் சொல்லிக் கொண்டாலும் இஸ்லாமியச் சூழல் மருந்துக்கும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்றாவது மகள் ஜாஸியா. இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கடைப்பிடிப்பதற்காக வீட்டினரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தன்னாலான எல்லா முயற்சிகளையும்...