14 | பிரதிபலன்

95 19 15
                                    

நேற்று நடந்தது கனவா? அல்லது உண்மையா? என்று ஜாஸியாவுக்குச் சந்தேகமாக இருந்தது.

ஏனெனில், நேற்று ஒன்றுமே நடவாதது போல யமீனா அடுத்த நாளும் அங்கு வந்திருந்தாள். சிரித்து சிரித்துப் பேசினாள்.

வெளிநாட்டிலிருக்கும் அவளது கணவன் தொலைபேசியில் அழைத்த போதும் வழக்கம் போல சாதாரணமாகப் பேசினாள்.

ஜாஸியாவுக்குத் தலையே வெடித்து விடும் போலிருந்தது. முடியுமான வரை யமீனாவின் முகத்தைப் பார்க்காமல் தவிர்த்துக் கொண்டாள்.

யமீனாவும் அவளைக் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. தன் பாட்டில் காதில் இயர்போனை மாட்டிக் கொண்டு ஆங்கிலப் பாடல்களை முனுமுனுத்துக் கொண்டிருந்தாள்.

அவள் வீட்டில் மாமா, மாமியுடன் தனியே இருப்பதால் இங்கு வந்து விடுகிறாள் என்று தான் நிஸாவும் ஹாஷிமும் எண்ணிக் கொண்டிருந்தனர்.

ஜாஸியா எதிர்பார்த்தது போல சற்று நேரத்தில் நாஸிரும் வந்தான். இவர்கள் இரகசியமாகச் சந்திக்கும் தளம் அங்கு தான் போலும்.

அதனால்த் தான் முன்னரெல்லாம் வாரமொரு முறை மட்டுமே வந்து செல்லும் யமீனா இப்போது தினமும் வருகிறாள்.

இதை எவரிடம் சொல்லி ஆலோசனை கேட்பது? தான் அடுத்த கட்டமாக என்ன செயவது? ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.

நாஸிர் தன்னை விட்டுத் தன் சகோதரியிடம் மையல் கொண்டு விட்டான் என்பது அவளுக்குத் துளியும் கவலையை ஏற்படுத்தவில்லை.

மாறாக அவளுக்கு அது மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால், தனது சகோதரி எக்கேடு கெட்டாவது போகட்டும் என்று நினைக்க அவள் ஒன்றும் கல் மனதுக்காரியல்ல.

யமீனாவுக்கும் நாஸிருக்கும் ஒரே வயது தான். நான்கு பேரின் வாழ்வு பாழாகப் போவதையிட்டே அவள் வருந்தினாள். யமீனாவின் கணவனுக்கு இது தெரிந்தால் என்ன செய்வார்?

நல்ல வேளையாக திருமணத்துக்கு முன்பு ஜாஸியா இதை அறிந்து கொண்டாள். ஆனால் அவளது பெற்றோரிடம் இதைச் சாென்னால் நம்பவா போகிறார்கள்?

நிழல் கொடுத்த மரம்✔Where stories live. Discover now