05 | நினைவலைகளின் மீட்டல்

107 18 29
                                    

அவள் ஓட்டலிலிருந்து வெளியேறிய பின்பு தான் எப்படி வீட்டுக்குச் செல்வது என்று யோசித்தாள்.

அவனது காரில் வந்ததே பெருந்தவறு. அவனை முன்னால் போகச் சொல்லி விட்டு அவளது காரிலேயே வந்திருக்கலாம்.

அவள் நின்று கொண்டிருந்த இடத்துக்குப் பின்னால் காலடிச் சத்தம் கேட்கவே, திரும்பிப் பார்த்து அது நாஸிர் தானென்று உறுதி செய்து கொண்டவள் ஒரு உஷ்ணப் பார்வையை வீசி விட்டு விறு விறுவென்று சென்று விட்டாள்.

அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவளைப் பத்திரமாக வீட்டில் கொண்டு சென்று விடாவிடின் அவன் மீது அங்கிளுக்கும் ஆன்டிக்கும் இருக்கும் நல்ல அபிப்பிராயம் அழிந்து விடும்.

வேகமாகச் சென்று காரைக் கிளப்பியவன் ஜாஸியா நடந்து சென்று கொண்டிருந்த நடை பாதையினருகே நிறுத்தினான்.

அதைக் கண்டும் காணாதது போல சென்று கொண்டிருந்தவள் மீது கோபப்படாமலிருக்க முடியவில்லை அவனால்.

"ஜாஸியா! ஏறுங்க கொண்டு போய் விடுறேன்" என்று மிருதுவாகத் தான் சொல்லிப் பார்த்தான்.

மீண்டும் அதே உஷ்ணப் பார்வையை அவனுக்குப் பரிசளித்து விட்டு நடையைத் துரிதப்படுத்தினாள்.

"சொன்னாக் கேளுங்க ஜாஸியா. அங்கிளும் ஆன்டியும் என்ன தான் திட்டுவாங்க" என்று அவன் கெஞ்சியதைப் பார்த்து அவளுக்குக் கடுப்புக் கூடியதே ஒழிய பரிதாபம் ஏற்படவில்லை.

"போய் திட்டு வாங்கு" என்று மனதினுள் கறுவிக் கொண்டாள்.

அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் காரை விட்டு இறஙகி வந்தவன் அவளது தோளைப் பற்றி நிறுத்தப் போனான்.

அதையுணர்ந்து ஜாஸியா வேகமாக நகர்ந்து விட அருகிலிருந்த கம்பி வேலி அவன் கையைப் பதம் பார்த்தது.

உள்ளங்கை கிழிந்து குருதி வழிய ஆரம்பித்தது. ஜாஸியா பயந்து போனாள்.

அவன் கையையே சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள், சுதாகரித்துக் கொண்டு தனது கைக்குட்டையை எடுத்து இரத்தம் ஊற்றெடுத்துக் கொண்டிருந்த அவன் கை மேல் போட்டு விட்டு,

நிழல் கொடுத்த மரம்✔Where stories live. Discover now