அஸ்ராவும் யமீனாவும் போனதும் ஜாஸியா தான் உணவுப் பாத்திரங்களனைத்தையும் கழுவி வைத்தாள்.
நிஸா ஹாஷிமுடனோ ஜாஸியாவுடனோ இன்னும் ஒரு வாத்தையாவது பேசவில்லை.
அவள் அறையில் உட்கார்ந்த வண்ணம் சிந்தனையில் ஆழ்ந்திருந்த போது கதவு தட்டும் ஓசை கேட்டது.
கதவை எவரும் தட்டுவதில்லையே. அழைப்பு மணியை அல்லவா அழுத்துவார்கள்?
யோசனையுடன் முந்தானையைச் சரி செய்து அணிந்து கொண்டு வந்து எட்டிப் பார்த்தாள்.
அங்கே அவர்களது வீட்டு மேல் மாடிக்கு ஏறும் படிக்கட்டுகளின் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அருகிலிருந்த மேசையைத் தான் தட்டியிருக்க வேண்டும். அவள் தனது பார்வையை விலக்கிக் கொள்ள, அதையே செய்த அந்த நபரும்,
"ம்ம்... சிஸ்டர்! எங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கொஞ்சம் தர ஏலுமா?" என்று தெளிவாகக் கேட்டார்.
அவள் தலையசைத்து விட்டுச் சமையலறைக்குள் சென்று ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி இரண்டு சிறிய கண்ணாடிக் குவளைகளுடன் கொண்டு வந்து கொடுத்தாள்.
கேட்டவர் வேறெங்கோ பார்த்துக் கொண்டு நின்றிருக்க, அதை அருகிலிருந்த மேசை மேல் சற்று ஓசையுடன் வைத்து விட்டு நகர்ந்து நின்றாள்.
திரும்பிப் பார்த்துப் புன்னகைத்து விட்டு நன்றியுடன் அவற்றை எடுத்துச் சென்றார் அந்த மனிதர்.
இரண்டு பெண்கள் வீட்டில் தனியே இருப்பதைப் பொருட்படுத்தாமல் மூன்று அந்நிய ஆண்களைக் கொண்டு வந்து ஹாஷிம் தனது வீட்டில் வைத்துள்ளது தான் ஜாஸிவுக்கு ஜீரணிக்க முடியாமலிருந்தது.
அது தெரிந்தும் ஒரு வயது வந்த மகளைத் தனித்திருக்க விட்டு அறைக்குள் தன் பாட்டில் தூங்கும் அவள் தாயை என்ன சொல்வது?
நல்ல வேளை அவர் பார்ப்பதற்கு நல்லவர் போலிருக்கிறார் என்று பெருமூச்சு விட்டுக் கொண்டவள் தானும் அறைக்குள் சென்று ஒரு புத்தகத்துடன் முடங்கி விட்டாள்.
YOU ARE READING
நிழல் கொடுத்த மரம்✔
Spiritualமுஸ்லிம்கள் என்று பெயருக்குச் சொல்லிக் கொண்டாலும் இஸ்லாமியச் சூழல் மருந்துக்கும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்றாவது மகள் ஜாஸியா. இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கடைப்பிடிப்பதற்காக வீட்டினரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தன்னாலான எல்லா முயற்சிகளையும்...