ஜாஸியா எதிர்பாராத நேரம் அவளை நெருங்கி வந்து அணைத்துக் கொண்டாள் யமீனா.
ஜாஸியா கல்லாக உறைந்து நின்றிருந்தாள். அவளது விழிகளிலிருந்து மட்டும் அருவி வழிந்து கொண்டிருந்தது.
சில கணங்களில் ஏங்கியேங்கி அழத் தொடங்கினாள் அவள். அதற்கேற்றவாறு தங்கையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள் யமீனா.
"தாத்தா... என்னால முடியல" என்றாள். வார்த்தைகள் அந்தரத்தில் ஊசலாடின.
"ஏன் ஜாஸி? என்ன பிரிச்சின? சொல்லு மா. நான் இருக்கேன் உன்னோட" என்று ஜாஸியாவின் கூந்தலைக் கோதி விட்டுக் கொண்டிருந்தாள்.
"இந்தக... கல்யாணத்தை நிறுத்திடு ப்லீஸ். நான் சொன்னாத் தானே கேட்க மாட்டாங்க. நீ... நீயாவது எடுத்துச் சொல்லு. இவன... எனக்கு சுத்தமாப் பிடிக்கல" என்றவள் மூர்ச்சையடைந்து நிலத்தில் விழுந்து விட்டாள்.
பதறியடித்துக் கொண்டு அவளைத் தாங்கிப் பிடித்த யமீனா, "மம்மீ! மம்மீ!" என்று நிஸாவை அழைத்தாள்.
நிஸாவும் பதறிக் கொண்டு ஓடி வந்தார். அவர் கண் முன் கண்ட காட்சியில் இதயமே நின்று விட்டது போலத் தான் உணர்ந்தார்.
இருவருமாகச் சேர்ந்து அவளைத் தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தினர்.
ஹாஷிமுக்கு தகவல் சொல்லி விட்டு ஜாஸியாவின் காரிலேயே அவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
யமீனா காரைச் செலுத்த, பின்னிருக்கையில் நிஸாவின் மடியில் மௌனமாகக் கிடந்தாள் ஜாஸியா.
நிஸாவுக்கு நிமிடத்துக்கு நிமிடம் பதற்றம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.
யமீனாவிடம் வேகமாகச் செல்லுமாறு துரிதப்படுத்தினாலும் அவர் கண்கள் ஜாஸியாவின் வதனத்தையே மொய்த்துக் கொண்டிருந்தது.
ஜாஸியாவின் மனதை நன்கறிந்து வைத்திருந்த யமீனா அவள் அணிந்து கொண்டிருந்த உடைக்கு மேலாலேயே நீண்டதொரு மேலாடை(கோட்)யை அணிவித்து, ஹிஜாபையும் நேர்த்தியாக அணிவித்து, கால்களுக்கும் காலணிகளை அணிவித்து விட்டிருந்தாள்.
YOU ARE READING
நிழல் கொடுத்த மரம்✔
Spiritualமுஸ்லிம்கள் என்று பெயருக்குச் சொல்லிக் கொண்டாலும் இஸ்லாமியச் சூழல் மருந்துக்கும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்றாவது மகள் ஜாஸியா. இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கடைப்பிடிப்பதற்காக வீட்டினரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தன்னாலான எல்லா முயற்சிகளையும்...