10 | வீதியோரம்

95 20 7
                                    

ஹாஷிம் ஒரு பணக்காரன் தான். மூன்று மாடி வீடொன்றைக் கட்டித் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வரும் அதே நேரம் அதற்கருகே இன்னுமொரு இரண்டு மாடி வீட்டைக் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார்.

அடுத்த நாள் காலையில் அவர் தனது கடையைக் கவனிக்கச் சென்று விட அப்போது தான் உறங்கினார் நிஸா.

அன்று பாடசாலைக்கும் செல்லவில்லை. தலைவலி காரணமாக விடுப்புச் சொல்லி விட்டார்.

காலைச் சாப்பாட்டைக் கூட ஜாஸியா தான் சமைத்துத் தந்தைக்குப் பறிமாறினாள்.

ஆனால் ஹாஷிம் மகள் சமைத்ததற்காக இரண்டு வாய் உட்கொண்டு விட்டுப் பேசாமல் போய் விட்டார்.

ஜாஸியாவும் நிஸாவுக்குச் சாப்பாட்டைப் போட்டு மூடி வைத்து விட்டுக் கிளம்பிப் போனாள்.

இன்று முதன் முறையாக அவள் அபாயா அணிந்து வெளியே செல்கிறாள்.

ஆனால் அந்தப் புது வித அனுபவத்தை உணரத் தான் அவளால் முடியவில்லை.

நேற்றிரவு என்ன நடந்திருக்குமென்பது பற்றித் தீவிரமாகச் சிந்தனை செய்து கொண்டிருந்தது அவள் மனம்.

ஆனால் ஒரு முடிவுக்கும் அவளால் வர முடியவில்லை என்பதே உண்மை. அவளால்த் தான் ஏதாவது நடந்திருக்குமா?

அதை நினைக்கவே பயமாக இருந்தது. அன்று முழு நாளும் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.

அவளது அபாயாவை அனைவரும் புதிதாகப் பார்ப்பதைக் கூட அவள் கவனிக்கவில்லை.

ஒரு வரைபடத்தைப் பிழையாக வரைந்து திட்டு வாங்கியது தான் அதிகம். தலை வெடித்து விடும் போலிருந்தது.

அன்றும் அரை நாளுடன் வீட்டுக்குச் சென்று விட்டாள். இன்னும் ழுஹருக்கு அதான் கூடச் சொல்லவில்லை.

வீட்டுக்குள் வழமை போல ஸலாம் கூறிக் கொண்டு நுழைந்துவளை பரிச்சயமில்லாத மூன்று சோடிக் கண்கள் பார்த்தன.

வேகமாக உள்ளே சென்றவள் சமையலறையிலிருந்து தேநீர்க் கோப்பைகள் அடுக்கப்பட்ட தட்டுடன் வந்த ஹாஷிம் மீது மோதி விட்டாள்.

நிழல் கொடுத்த மரம்✔Where stories live. Discover now