21 | மகிழ்ச்சி

90 20 17
                                    

ஜாஸியாவோ, வேலைக்குச் செல்வதும் வீட்டுக்கு வருவதும் ஆயிஷாவுடன் கதைத்துக் களிப்பதுமாய் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள். இதற்கிடையில் ஆயிஷாவும் ஓர் இனிப்பான செய்தியைக் கொண்டு வந்த அவள் காதில் ஊற்றினாள்.

ஆயிஷாவின் மைத்துனன் அவளை மணக்கச் சம்மதம் தெரிவித்திருப்பதே அந்தச் செய்தி. இதையறிந்து ஜாஸியாவுக்கு மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருந்தது.

ஹாஷிமிடமும் விடயத்தைக் கூறவே, அவராே ஆயிஷாவும் அவரது மகள் போலத் தான், அவளது திருமணத்தையும் தானே சிறப்பாக நடாத்தி வைப்பதாகக் வாக்களித்தார்.

இது ஆயிஷாவின் அன்னையை மிகவும் மகிழ்ச்சியூட்டியது. அவரது கண்களின் நன்றியின் பிரதிபலிப்பாகக் கண்ணீர் சுரந்தது. இதற்கிடையில் ஜாஸியாவுக்கு பல விதமான எண்ணங்களும் ஒரு சேர வந்து மனக்கடலின் அலைகளாய் மேலெழும்பிச் சென்றன.

தனது தாயாருடன் கழித்த நாட்களும், சகோதரிகளுடன் சண்டையிட்டுக் கோபித்துக் கொண்டிருந்த சிறுபிள்ளைத்தனமான செயல்களும், தலையணைச் சண்டைகளும் அவளது எண்ணப் பறவையைத் தட்டியழுப்பிப் பறக்க வைத்தன.

அவள் வீட்டில் சகோதரிகள் மூவருக்கும் ஒரே அறையைத் தான் படிப்பதற்கான மேசைகளுடன் ஒழுங்கு செய்து கொடுத்திருந்தனர். அந்த அறையிலேயே அஸ்ராவும் ஜாஸியாவும் இரவில் உறங்குவர். யமீனா மட்டும் மேல் மாடியில் சென்று உறங்குவாள்.

பகல் முழுவதும் மூவரும் சேர்ந்து கொண்டு கும்மாளம் தான். சரியாகக் காலை ஏழு மணிக்லெ்லாம் பெரிய ஸ்பீக்கர்கள் இரண்டையும் ஆன் செய்து வைத்து விடுவாள் யமீனா.

அதிலிருந்து வெளி வந்து கொண்டிருக்கும் சினிமாப் பாடல்களும் பின்னணியின் ஒலிக்கும் இசையும் ஜாஸியாவைத் தொல்லை செய்தன என்பது தான் உண்மை.

அவளால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. யமீனாவிடம் அதை நிறுத்துமாறு கேட்டாலும் பெரியவள் என்ற திமிருடன் திட்டி விட்டுப் போவாள்.

நிழல் கொடுத்த மரம்✔Where stories live. Discover now