அவர்கள் மூவரையும் அழைத்துச் செல்வதற்காக அவர்களது மாமா இன்று வருவதாகக் கூறியிருந்தார்.
ழுஹருக்கு முன்பு அவர் வருவதாகக் கூறியிருந்தமையால் இவர்களுக்கும் சேர்த்துக் காலையுண்டியைத் தயார் செய்து கொண்டிருந்தார் நிஸா.
நிஸா சமைத்து வைத்து விட்டுப் பாடசாலைக்குக் கிளம்பிச் சென்று விட, ஜாஸியாவும் காலை எட்டு மணிக்கெல்லாம் வேலைக்குச் சென்று விட்டாள்.
கடைசியாக ஒரு முறை அந்த இளைஞர்களைத் திரும்பிப் பார்த்து விட்டுச் சென்றாள். அதை ஹாஷிம் கவனிக்காமலில்லை.
ஹாஷிமின் முகபாவனை அவர் சிந்தனை வயப்பட்டிருந்ததை தெளிவாகச் சுட்டிக் காட்டியது.
அவருக்கு நேரெதிரே கைகளை நெஞ்சுக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்திருந்த ஹாரூன் கூறிய வார்த்தைகள் தான் அவரது சிந்தனையைக் கிளறி விட்டிருந்தது.
சற்று நேரத்தில் தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு வேறு விடயங்களைப் பேசத் தொடங்கினார்.
ஜாஸியாவுக்கு நிஸா அவளது அபாயாவைக் கண்டும் காணாதது போல இருந்தது பெரும் நிம்மதியையளித்தது.
காலையில் ஓரிரு வார்த்தைகளை பேசியவர் மாலையானதும் கோபம் நீங்கிக் கதைக்கத் தொடங்கி விடுவார்.
நேற்றும் அதற்கு முந்தைய நாளும் போலல்லாமல் இன்று வேலையில் நன்கு கவனம் செலுத்த முடிந்தது.
அவளுக்கு உலகத்திலுள்ள அனைவருடனும் ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகவும் வெறுப்புக்குரிய ஒருவர் இருந்தாரானால், அது நாஸிராகத் தான் இருக்க வேண்டும்.
மாலையில் வீட்டுக்குள் நுழையும் போதே களிமண்ணால் செய்து வைத்த பொம்மை போல அவளையே குறுகுறுவென பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவனைப் பார்க்கையில் குமட்டிக் கொண்டு வந்தது.
இன்று தலைமுடியை வேறோர் விதமாகக் கத்தரித்திருந்தான். காதுகளுக்கு மேல்ப் பகுதி மொட்டையாகவும் தலையுச்சியில் துண்டு துண்டாகவும்.
YOU ARE READING
நிழல் கொடுத்த மரம்✔
Spiritualமுஸ்லிம்கள் என்று பெயருக்குச் சொல்லிக் கொண்டாலும் இஸ்லாமியச் சூழல் மருந்துக்கும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்றாவது மகள் ஜாஸியா. இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கடைப்பிடிப்பதற்காக வீட்டினரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தன்னாலான எல்லா முயற்சிகளையும்...