08 | பின்னோட்டம்

101 20 30
                                    

அவளுடைய சிறு வயது வாழ்க்கை மிகவும் குழப்பகரமானது. வெளியிலிருந்து பார்ப்போருக்கு அது அவ்வாறு விளங்காவிடினும் அனுபவித்துப் பார்த்த அவளுக்கு அது நன்றாகவே புரிந்தது.

அவளுடைய பெற்றோரையும் சகோதரிகளையும் விட இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கடைப்பிடித்தொழுகுபவர்கள் வேறெவருமே இல்லையென்று தான் அவள் நினைத்திருந்தாள்.

வெளியுலகில் அவள் காலடியெடுத்து வைத்ததும் அந்த எண்ணம் கண்ணாடியாச் சிதறிக் காணாது போய் விட்டது.

வெளியே பயணம் எங்காவது போகும் போது மட்டும் தலையில் முந்தானையொன்றைப் போட்டுச் சென்றால் சரியென்று தான் அவளும் நினைத்துக் எண்ணிங் கொண்டிருந்தாள்.

அவளது குடும்பத்தினரைப் போலிருக்கவில்லை அவள் கண்ட மற்றவர்கள்.

அவளுக்குப் பன்னிரண்டு வயதிருக்கும் ஹிதாயா என்ற மாணவி புதிதாக அவளது வகுப்புக்கு வந்து இணைந்த போது.

இவள் தானாகவே சென்று எவருடனும் பேசிப் பழகும் ரகமல்ல. ஹிதாயா தான் இவளிடம் வந்து நட்புக் கரம் நீட்டினாள்.

ஜாஸியாவுக்கு ஹிதாயாவைப் பிடித்துப் போய் விட்டது. கை கோர்த்துக் கொண்டு சேர்ந்து சுற்றுவது பழக்கமாகி விட்டது இருவருக்கும்.

ஹிதாயாவின் பழக்க வழக்கங்களும் பேச்சும் அவளை வெகுவாகக் கவர்ந்திழுத்தன.

அவளது வீட்டில் முற்றிலுமில்லாத ஒரு கலாசாரத்தை ஹிதாயா பின்பற்றுவதாகப் பட்டது ஜாஸியாவுக்கு.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது மூளையில் உதிக்கும் சந்தேகங்களை அவளிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வாள்.

நிஸாவின் சகோதரியின் பிள்ளைகள் அடிக்கடி அவர்களது வீட்டுக்கு வந்து போவதும் இவர்கள் அங்கு சென்று வருவதும் நீண்ட காலமாக நிலவி வரும் பழக்கம்.

ஒரு நாள் நிஸாவின் இளைய சகோதரியின் மகனான ஜமால் வந்திருந்தான்.

ஜாஸியா அப்போது தான் மாலை நேர வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்திருந்தாள்.

நிழல் கொடுத்த மரம்✔Where stories live. Discover now