04 | சந்திப்பு

128 19 40
                                    

ஒரு நீண்ட கடும்பச்சை வர்ண உடையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவள் அதை அவசரமாக அணிந்து கொண்டாள்.

ஒரு ஹிஜாபையும் எடுத்து அணிந்து கொண்டவள் கைப்பையை எடுத்து மாட்டிக் கொண்டு கண்ணாடியையும் அணிந்தவாறு வெளியே வந்தாள்.

அவள் அபாயா அணிய வேண்டுமென எவ்வளவு தான் கெஞ்சிப் பார்த்தும் நிஸா மறுத்து விட்ட காரணத்தினால்த் தான் இவ்வாறான நீண்ட உடைகளை வெளியே அணிந்து செல்கிறாள் ஜாஸியா.

இன்று நாஸிரிடம் அவனைத் தனக்குப் பிடிக்கவில்லையென்று அவன் முகத்திலேயே அடித்துக் கூறி விட்டு வருவதாக எண்ணித் தான் இப்போது தயாராகி வெளியே வந்தாள்.

அவனும் கார் சாவியைக் கையில் சுழற்றியவாறு வாயிலில் யமீனாவுடன் கதைத்தவாறு நின்றிருக்க, ஜாஸியா வருவதைக் கண்டதும் புன்னகைத்தான்.

"போவோமா?" என்று மீண்டும் புன்னகைத்து விட்டு அவன் முதலில் வெளியேற, நிஸாவையும் யமீனாவையும் பார்த்து முறைத்து விட்டுக் கடுப்புக் குறையாமலே அவனைத் தொடர்ந்து வெளியேறிச் சென்றாள் ஜாஸியா.

'இவன் முகத்தில் துப்பி விட்டுத் தான் வருவேன்' என்று கறுவிக் கொண்டவள் அவன் காரின் முன் கதவை அவளுக்காகத் திறந்ததைக் கூடக் கண்டு கொள்ளாமல் பின் கதவைத் தானே திறந்து அமர்ந்து கொண்டாள்.

அவனும் புருவங்களைச் சுருக்கி யோசித்து விட்டு ஏதோ புரிந்ததாகப் பாசாங்கு செய்து கொண்டு ஓட்டுனரின் இருக்கையில் சென்று அமர்ந்தான்.

பயணம் மயான அமைதியுடன் தொடர்ந்து கொண்டிருக்க, ஜாஸியாவின் மனம் தான் எரிமலையாகக் குழம்பைக் கக்கிக் கொண்டிருந்தது.

ஒரு முறை மட்டும் கண்ணாடி வழியே அவனைப் பார்த்தவள் பின்னர் திரும்பவேயில்லை.

அவளது மாதிரியை அறிந்து கொண்டவனாய் நாஸிர் மௌனம் காக்க, கார் வந்து ஒரு பிரபல்யமான ஓட்டலின் முன்னால் நிறுத்தப்பட்டது.

அவனுக்கு முன்பே அவள் இறங்கி விறு விறுவென்று ஓட்டலினுள்ளே நுழைந்தாள்.

நிழல் கொடுத்த மரம்✔Where stories live. Discover now