03 | வெறுப்பு

126 22 36
                                    

நாஸிரை மணந்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டாள் ஜாஸியா.

அவளுக்குத் தெரியும், இப்படிப்பட்ட ஒருவனுடன் தனக்கு வாழ்க்கை நடத்த முடியாது என்று.

தனது பெற்றோருக்கும் சகோதரிகளுக்கும் அதனை மிருதுவாக எடுத்துச் சொன்னாள்.

அவர்கள் அவளைப் புரிந்து கொள்வதாகவே இல்லை. இப்போது அவளுக்குக் கோபம் தலைக்கேறியது.

அவள் மற்றவர்களைப் போலல்ல. அனைவரிடமும் சாதாரணமாகப் பேசிப் பழகிய போதிலும் அவளைப் போலவே குணங்களும் செயற்பாடுகளும் இருப்பவர்களிடம் தான் முழுமனதுடன் பழகுவாள்.

அவளுக்கு ஒழுங்கான ஹிஜாப் அணியாத பெண்களை எப்போதும் பிடிக்காது. அந்தக் குழுவில் அவளது குடும்பத்தினர் அனைவரும் அடங்குவர்.

அவள் இசைய வெறுத்த அந்த நாளிலிருந்து இசையில் ஊறி லயித்திருப்பவர்களை வெறுக்காதிருக்க அவளால் முடியாது.

தாடியை முழுமையாக சவரம் செய்த ஆண்களைப் பார்த்தாலே அவளுக்குக் குமட்டிக் கொண்டு வரும். அதில் நாஸிரும் அடங்குவான்.

தொழுகையில் பொடுபோக்காக இருப்பவர்களின் நட்பை இதுவரையில் அவள் தவிர்த்தே வந்திருக்கிறாள்.

மஹ்ரமில்லாத ஆணகளுடன் வரையறையின்றிப் பேசிப் பழகும் பெண்களுடன் அவள் தேவையின்றிப் பேசுவதேயில்லை.

இப்படியாக அவளே அவளுக்காக சில வரையறைகளை விதித்துக் கொண்டு ஒரு சிறு வட்டத்துக்குள் தன்னைக் குறுக்கிக் கொண்டாள்.

அப்படிப்பட்டவர்களுடன் சேரந்தால் தனக்குள் இருக்கும் கொஞ்சம் ஈமானும் கரைந்து காணாமல் போய் விடுமோ என்ற பயம் தான் அவளுக்கு.

அவளுக்கே தெரியும் இப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்று. ஆனால் அவளால் மனதை மாற்றிக் கொள்ளவே முடிவதில்லை.

அல்லாஹ்வே தனது அடிமைகளை வெறுக்காமலிருக்கும் போது, அல்லாஹ்வின் அடிமைகளில் ஒருத்தியான அவள் மற்றவர்கள வெறுத்தொதுக்க என்ன உரிமை கொண்டிருக்கிறாள?

நிழல் கொடுத்த மரம்✔Where stories live. Discover now