அணிந்திருந்த உடைக்கு மேலாலே இன்னுமொரு மேற்சட்டையைப் எடுத்து அணிந்து கொண்டாள்.
அதற்குக் காரணம் அவள் அணிந்திருந்த உடை சற்று இறுக்கமாக இருப்பதாக அவள் உணர்ந்தது தான்.
பின்னர் பெரியதொரு முந்தானையை எடுத்து தலை முதல் இடுப்பு வரை போர்த்திக் கொண்டாள்.
தான் ஏற்கனவே துவைத்து ஈரமான உடைகளையெல்லாம் போட்டு வைத்திருந்த கூடையைத் தூக்கியவாறு வீட்டின் முன் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றாள்.
முற்றத்தில் மறைவான ஒரு பகுதியில் கட்டப்பட்டிருந்த கயிற்றுக் கொடிகளில் கழுவிய உடைகளையெல்லாம் ஒவ்வொன்றாக உலர்த்த விட்டாள்.
அப்போது நாஸிர் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைவதைக் கண்டாள். அவசரமாக வெற்றுக் கூடையைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்று விட்டாள்.
அவளுக்குத் திருமணம் பேசி வைத்திருக்கும் மாப்பிள்ளை தான் நாஸிர். அவனைக் காட்ட இயலாது ஜாஸியாவுக்கு.
அவன் வடக்கு என்றால், அவள் தெற்கு. அவன் வானம் என்றால், அவள் பூமி. இருவருக்கு ஒரு சிறு விடயத்திலாவது ஒத்து வராது.
அவன் வீட்டு வாயிலுக்கு வந்து அழைப்பு மணியை அழுத்துவது கேட்டது.
காது கேட்காதவள் போல வேண்டுமென்றே இல்லாத வேலையொன்றை இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருந்தாள்.
"ஜாஸியா, யாரு வந்திருக்கான்னு பாருங்க" என்று உற்சாகமாகக் கூறிய தாயின் குரல் கேட்டதும், உடனே குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
"ஜாஸியா! ஜாஸியா! என்று கதறும் அவளது மூத்த சகோதரியைக் கண்டு கொள்ளவில்லை அவள்.
சற்று நேரத்தில் யாரும் அறியாமல் மேல் மாடிக்குச் சென்று அங்கு நின்று கொண்டு வேடிக்கை பார்க்கலானாள்.
அதற்குள் நாஸிர் அவளது தாயுடனும் சகோதரிகளுடன் கதைத்து விட்டுச் சென்றிருந்தான்.
அவனுக்கே தெரியாமல் நிலத்திலிருந்த ஏதோவொன்றின் மீது அவன் பாதம் பட்டு விட, அதுவொரு நல்ல பாம்பு என்று தெரிவதற்குள் பாய்ந்து அவன் காலைத் தீண்டியிருந்தது அது.
YOU ARE READING
நிழல் கொடுத்த மரம்✔
Spiritualமுஸ்லிம்கள் என்று பெயருக்குச் சொல்லிக் கொண்டாலும் இஸ்லாமியச் சூழல் மருந்துக்கும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்றாவது மகள் ஜாஸியா. இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கடைப்பிடிப்பதற்காக வீட்டினரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தன்னாலான எல்லா முயற்சிகளையும்...