"அம்மா, அம்மா" என்று வீட்டிற்குள் வந்த மீனாக்ஷியை அவளின் தாய்
"எதுக்குடி இப்போ என்ன ஏலம் விடுற. சத்தம் போடாம வர தெரியாதா உனக்கு" என்று அவள் மீது எரிந்து விழுந்தாள்.
கல்லூரி வாழ்க்கையில் முதல் நால் அனுபவத்தை தன் தாயிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்ற ஆசையில் வந்தவளுக்கு தன் தாயின் பாராமுக பேச்சு அவளின் உற்சாகத்தை கலையிழக்க செய்தது. மீனாக்ஷியின் வீடு கடந்து மூன்று வருடங்களாக அமைதியாகவே இருக்கின்றது. ஆனால் அதுவே மூன்று வருடங்கள் முன் என்றால் வீடே ஒரே கலகலப்பாக சத்தமாக இருக்கும். தனது அக்கா செய்துகொள்ள இருந்த கலப்பு திருமணம் அவர்கள் வீட்டில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்தது. அது நல்ல மாற்றமா என்றால் கண்டிப்பாக இல்லை.
மீனாக்ஷியின் தாய் தந்தையர் தங்களின் இரண்டு மகள்களின் மீதும் அளவுக்கதிமாக பாசம் வைத்திருந்தனர். அவர்கள் கேட்பவை எல்லாமே அவர்களுக்கு கிடைக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். அது போலவே தங்கள் மூத்த மகள் கலப்பு காதல் திருமணத்திற்கு அனுமதி வேண்டி நின்ற போது கூட, எந்த ஒரு தயக்கமும் இன்றி சம்மதம் தெரிவித்தனர். ஆனால் விதி வேறு வழியில் விளையாடியது.
மீனாக்ஷியின் பெற்றோர் சாதி, மத பேதங்களில் அதிக நாட்டமில்லாதவர்களாக இருந்தாலும் ஜோதிடத்தில் அவர்களுக்கு அதீத நம்பிக்கை இருந்தது. தங்கள் மகளின் திருமணத்திற்கு முன் தம்பதியினர் குலதெய்வ கோயிலுக்கு போய் வரவேண்டும் என்று அவர்களின் குடும்ப ஜோசியர் கூற, அது போலவே மீனாக்ஷியின் அக்கா வள்ளியும் அவளின் காதலனும் சென்றனர். சென்றவர்கள் சென்றவர்கள்தான். திரும்பி வரவில்லை. மூன்று வருடமாக அந்த இருவர் பற்றிய எந்த ஒரு தகவல் கூட இல்லை. உயிருடன் இருக்கின்றார்களா? இல்லை இறந்துவிட்டார்களா? என்பது கூட யாருக்குமே தெரியவில்லை. வள்ளியின் காதலனுடைய பெற்றோர் சாதியை தங்கள் உயிர் மூச்சாக கருதுபவர்கள். ஒரு வேலை அவர்கள்தான் எதுவும் செய்துவிட்டார்களோ என்று கூட தேடிப்பார்த்தாகிவிட்டது. அவர்களும் 'தங்களுக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை எனினும் அவர்களை கொல்லும் அளவுக்கு நாங்கள் ஒன்றும் காட்டுமிராண்டிகள் இல்லை' என கூற மீனாக்ஷியின் பெற்றோருக்கு இவர்களை பற்றி அறிய எந்த ஒரே ஒரு ஊடகமும் இல்லாமல் போனது. அன்றிலிருந்து மீனாக்ஷியின் வீடு ஒரு ஜீவனற்ற உடலை போலானது.
YOU ARE READING
சிந்தையில் தாவும் பூங்கிளி
Non-Fictionசத்தியமா எனக்கு எப்படி சொல்ரதுன்னு தெரியல. காரணம் முழுக்கதையும் இன்னுமே யோசிக்கல. கண்டிப்பா வழமையான கதைகள் போல நினைச்சி வந்தா மன்னிக்கவும்.இந்த கடையில் அந்த டீ கிடைக்காது. ஆகாஷனா, ஆகாயம் தீண்டாத மேகம் மாதிரி தவறு செய்யும் சாதாரன மானுடர்களை சுற்றி நட...