26

268 29 153
                                    

அன்று......

காலேஜில் மீனாக்‌ஷி, க்ரிஷ் மற்றும் ரேஷ்மாவுக்கு இடையில் நடந்த கலவரத்தில் மிகவும் பாதிப்படைந்தது ஷக்திதான். அன்று மீனாக்‌ஷி தன்னைத்தான் காதலிக்கின்றாள் என்பது புரியாமல் க்ரிஷ் அவளிடம் " ஷக்தியதானே காதலிக்கிற " என்று கூறியதை அங்கு வந்த ஷக்தி கேட்டுவிட, இந்த நொடி வரை அவன் அவள் தன்னை காதலிப்பதாக கூறுவாள் என்று காத்திருந்தான். ஆனால் இன்று டூயட் சாங்க் பாடியதில் இருந்து அவனால் காதலை மனதுக்குள் வைத்து கட்டுப்படுத்த முடியவில்லை. அணையை உடைத்து வெளிவரும் காட்டாற்று வெள்ளம் போல அவனுக்குள் இருந்த காதல் வெளிவர, அந்த காதலை இன்றே மீனாக்‌ஷியிடம் கூறலாம் என வந்தவன் அவர்களுக்குள் நடந்த சம்பாசனை கேட்டு அப்படியே அவன் காதல் மனம் சுக்கு நூறாக உடைந்தது. தன் உடைந்த மனதை பொறுக்க மனமின்றி தனது பைக்கை எடுத்துக்கொண்டு பீச்சுக்கு சென்றவன் யாருமில்லாத ஒரு இடதை தெரிவு செய்த அழ ஆரம்பித்தான். சிறுது மனம் ஆசுவாசப்பட்டதும் தன் நண்பனுக்கு கால் செய்தான்.

" ஹலோ...." என்றவன் மறுமுனையில் தன் நண்பனின் குரல் கேட்க அழ ஆரம்பித்துவிட்டான்.

" டேய் ஷக்தி ஏண்டா அழுற. என்னாச்சு? அப்பாக்கு ஏதும் ஆச்சா?" என்று மறுமுனையில் ஷக்தியின் நண்பன், ராதாவின் காதலன், க்ரிஷ்ஷின் மாமா சுரேஷ் பதறினான்.

" சுரேஷ், நான் அன்னைக்கு சொன்னேன்ல ஒரு பொண்ணு என்ன காதலிக்கிறான்னு. ஆனா இன்னைக்கு..." என்றவன் அவன் க்ரிஷ் மற்றும் மீனாக்‌ஷிக்கு இடையில் நடந்த உரையாடலை கூறினான். சிறிது நேரம் மறுமுனையில் சுரேஷ் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தான். அவன் மனதுக்குள் ஆயிரம் யோசனைகள். தன் நண்பனின் காதலை எப்பாடு பட்டாவது சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் உதித்தது. நட்புக்குத்தான் நியாய தர்மங்கள் புரியாதே. தன் நண்பன் யாராவது ஒருவனை கைகாட்டி அடிக்க சொன்னால் அவனை அடித்த பின் ' ஏன் அவனை அடிக்க சொன்னாய்' என்று கேட்கும் ரகம் சுரேஷ். ஆனால் இங்கு அவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே க்ரிஷ் மீது ஒரு கோபம் இருந்ததால் மிக நிதானமாக யோசித்தான். இதில் மீனாக்‌ஷியின் வாழ்க்கையும் சம்பந்தப்படுவதால் அவளின் வாழ்க்கையிலும் சிறு கசப்பு வந்துவிடாத வகையில் தன் நண்பனின் காதலை சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணியவன் அந்த ஒரு சில நொடிகளுக்குள் ஒரு முடிவுக்கும் வந்தவன், தன் காதலியின் அன்பில் பங்கு போடும் க்ரிஷ்ஷை பழிவாங்க ஒரு சந்தர்ப்பம் அமைந்ததாகவும் எண்ணினான். இங்குதான் அவனின் துல்லியமாக திட்டமிடும் ஆற்றல் சறுக்கியது எனலாம்.

சிந்தையில் தாவும் பூங்கிளிWhere stories live. Discover now