27

256 25 51
                                    

இவர்களின் சண்டையின் பின் மூண்று நாட்கள் க்ரிஷ் காலேஜ் வரவில்லை. மீனாக்‌ஷியும் அவனின் மொபைலுக்கு கால் செய்ய அது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக காட்டியது. இந்த நேரத்தில்தான் மீனாக்‌ஷிக்கு க்ரிஷ்ஷை ரொம்பவும் அலைக்கழித்து விட்டோமோ என்ற எண்ணம் வந்தது.

க்ரிஷ்ஷை காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து அவள் அவனை காதலனாக பார்க்காமல் கணவனாகவே பார்க்க ஆரம்பித்தாள். கணவன் என்றால் சிலப்பதிகார கால கணவன் மனைவி போல கிடையாது. டேய், வாடா, என்னடா செல்லம் என அடைமொழி வைத்து பேசும் நவநாகரீக கணவனாக அவனை அவள் மனது நினைக்க தொடங்கியது. அதனாலேயே பல இடங்களில் மீனாக்‌ஷி அவனை டாமினேட் செய்ய ஆரம்பித்திருந்தாள். அவனுக்கும் அவள் டாமினேட் செய்வது பிடிக்கும் என்று மீனாக்‌ஷிக்கு தெரியும். ஒரு பெண்ணால் ஒரு ஆண் டாமினேட் செய்யப்படுவது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் தவறாக தோன்றலாம். ஆனால் டாமினேட் என்றால் என்ன என்பதை பொறுத்தே அது சுகமா, வலியா என்று அந்த தம்பதியினருக்கு இருக்கும்.

இன்றைய உலகில் பெண்களின் கல்வியறிவு பாரியளவில் வளர்ச்சி பெற ஆண்கள் தங்களுக்கு இருந்த சுமைகளில் பாதியை அவர்களிடம் ஒப்படைத்து விட்டனர். ஆனால் பெண்களின் சுமை அதிகமாகிவிட்டதை பெண்களும் ஆண்களும் மறந்து விட்டனர். சுமையை சுமப்பது ஒன்றும் பெண்களுக்கு புதிதில்லையே. மஞ்சத்தில் தன் மனதுக்கு பிடித்தவனை சுமக்க ஆரம்பித்ததில் இருந்து அவள் பயணமானது குழந்தை, பேரப்பிள்ளைகள் என்று அவள் மரணம் வரை நீண்டு கொண்டே செல்லும். இன்றைய நவநாகரீக உலகில் குடும்ப உறவை சீர்குலையச் செய்யும் நடைமுறைகளான ' லிவ் இன் டுகெதர்' , ' சிங்கிள் பேரண்ட்' போன்ற வார்த்தைகள் அவர்களின் வாழ்க்கையை முழுவதும் ஒரு போராட்டமாக மாற்றிவிட்டது.

மீனாக்‌ஷியால் காலேஜில் இருப்புக்கொள்ள முடியவில்லை. எத்தனையோ தடவை அவள் க்ரிஷ்ஷை தொடர்பு கொள்ள முயன்றும் அது கைகூடாமல் போக அவனின் வீட்டிற்கு தனியாக செல்ல முடிவெடுத்தாள். முதன் முறையாக க்ரிஷ்ஷை அவள் தனியாக சந்திக்க முடிவெடுத்ததுதான் அவளின் முதல் சறுக்கல்.

சிந்தையில் தாவும் பூங்கிளிWhere stories live. Discover now