10

379 36 289
                                    

க்ரிஷ்ஷின் வீடு புயல் அடித்து ஓய்ந்ததை போல காணப்பட்டது. எந்த பொருளும் உடையவில்லை, எந்த பொருளும் தூக்கி வீசப்படவுமில்லை. எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவும் இல்லை. ஆனால் நான்கு உள்ளங்கள் மட்டும் இந்த புயலில் சிக்கி சின்னாபின்னமாகி இருந்தது. ஆம், நான்கு இதயங்கள்தான். ருபினியையும் சேர்த்து.

" க்ரிஷ் அவங்க உங்க சொந்த அக்காவா?" என்று அவள் கேட்க என்ன நினைத்தானோ தெரியவில்லை ரூபினியை இறுக்கமாக கட்டிப்பிடித்தான்.  அவன் அணைப்பில் துளி கூட காமம் இல்லை. தாயிடம் அடைக்களம் தேடும் சேயை போல இருந்தது அவன் அணைப்பு. ஆண்களின் இச்சையுடன் கூடிய அணைப்பையே இத்தனை நாள் கண்டிருந்தவளுக்கு இவனின் இந்த அணைப்பு ஒரு வித பரவசத்தை கொடுத்தது. பொண்ணால் ஒரு ஆண் தன்னை எந்த நோக்கத்தில் அணைக்கின்றான் என்பதை அவன் அவளை அனைத்து இரண்டு நொடிகளில் கணித்துவிட முடியும்.

சில நிமிடங்கள் அவளின் கேள்விக்கு பதில் கூறாமல் அணைத்திருந்தவன் ஆவேசமாக அவளை முத்தமிட தொடங்க ரூபினி அவனின் முத்தங்களுக்கு தடை விதித்தாள். என்ன நடந்தாலும் இன்று இந்த அணைப்பை காமதின் பக்கம் அழைது செல்ல அவள் விரும்பவில்லை.  அவளின் நிராகரிப்பை அவன் என்ன என்பது போல பார்த்தான்.

" இந்த பார்வையால பதில் சொல்றது, மெளனமா இருந்து சாதிக்க பார்க்கிறது எல்லாமே போதும். இனிமே இந்த விளையாட்டு எல்லாம் என்கிட்ட வேணாம். எதுவா இருந்தாலும் என்கிட்ட வார்த்தைகளால பேசுங்க. என்கிட்ட நீங்க அதிகமான பேசின வசனம் ' இன்னைக்கு வர முடியுமா?' இதை தவிர்து என்கிட்ட வேற எது பேசியிருந்தாலும் அது ரொம்ப கம்மியாதான் இருக்கும். சரி அதை எல்லாம் விடுங்க. இப்போ வந்தது உங்க சொந்த அக்காவா?" என்று அவள் கேட்க க்ரிஷ் அமைதியாக இருந்தான்.

வேதாளம் மறுபடி முருங்கை மரம் ஏறுவதை கண்டவள்
"நீங்க கூப்பிட்டீங்கன்னுதான் வந்தேன். இன்னைக்கு உங்கள பத்தி சொல்ரேன்னு சொன்னீங்க. ஆனா ரொம்ப அமைதியா இருக்கீங்க. சரி நான் போறேன். இனிமே எப்போதும் என்ன காண்டாக்ட் பண்ண வேணாம்" என்று க்ரிஷின் வீக் பாய்ண்ட் பார்த்து சரியாக அடித்தாள்.

சிந்தையில் தாவும் பூங்கிளிWhere stories live. Discover now