வாசலில் நின்ற ரூபினி வீட்டிற்குள் இருந்த இரு பெண்களையும் வித்தியாசமாக பார்த்தாள்.
" என்னப்பா நாந்தான் வர்றேன்னு சொன்னேன்ல. அதுக்குள்ள என்ன.." விளையாட்டாக பேசதொடங்கியவள் நல்லவேலை அவள் மீனாக்ஷியின் கையில் இருந்த குழநதையை கண்டு கொண்டாள். இல்லை என்றால் விளையாட்டாக அவள் எதையும் ஏடாகூடமாக கேட்ட்டிருந்தால் அவ்விடம் ரணகளம் ஆகி இருக்கும்.
ரூபினி கூற வந்தது என்னவென்று ராதாவுக்கு புரியவில்லை. ஆனால் மீனாக்ஷிக்கு அவள் கூற வந்த விடயம் நன்றாகவே புரிந்தது. ருபினியின் பேச்சில் இருந்த எகத்தாளம் மீனாக்ஷிக்கு புரிய அவள் உடல் கூசியது. உடனே க்ரிஷ்
" உள்ள வா ரூபினி" என்று கூற இவ்வளவு நேரமும் தான் அழுதும் பேசாத தன் தம்பி எவளோ ஒரு பெண்ணை வீட்டிற்குள் அழைத்தது ராதாவின் இதயத்தை யாரோ ரம்பம் வைத்து அறுத்தது போல இருந்தது.
ரூபினிக்கு வீட்டில் இருந்தவர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு அசம்பாவிதம் மட்டும் நடக்க போகிறது என்பது மட்டும் நன்றாக புரிந்தது.
" யாரு க்ரிஷ் இவங்க தெரிஞ்சவங்களா?" என்று கேட்டுக்கொண்டு ரூபினி வீட்டிற்குள் நுழைய க்ரிஷ்
" இவங்க யாரோ கிருஷ்ணாவ தேடி வந்திருக்காங்க. என்னோட பெயரும் க்ரிஷ் என்றதால யாரோ அட்றஸ தப்பா சொல்லிட்டாங்க போல. அதனாலதான் சின்ன கன்ஃப்யூசன். நீ இரு ரூபினி நான் இவங்கள அனுப்பிச்சிட்டு வர்றேன்" என்று கூற ரூபினிக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்போதும் க்ரிஷ் பேசும் வசனங்கள் மணிரத்னம் படத்தில் வருவது போல ரத்தின சுருக்கமாக இருக்கும். இன்றுதான் அவன் பெரிய வசனம் ஒன்று பேசி இவள் கண்டிருக்கின்றாள்.
க்ரிஷின் பதில் கேட்டு கவலை கொண்ட ராதா
" மீனாக்ஷி நம்ம ஏதோ அட்றஸ் மாத்தி வந்துட்டோமாம். சார் சொல்றாரு. ஆமா நீங்க இவரோட ஃப்ரெண்டா?" என்று ராதா ரூபினியை நோக்கி கேட்க என்ன பதில் கூறுவது என்று ரூபினி தயங்கிக் கொண்டிருந்தாள். இங்கு மீனாக்ஷிக்கோ தலையில் அடித்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது.
YOU ARE READING
சிந்தையில் தாவும் பூங்கிளி
Non-Fictionசத்தியமா எனக்கு எப்படி சொல்ரதுன்னு தெரியல. காரணம் முழுக்கதையும் இன்னுமே யோசிக்கல. கண்டிப்பா வழமையான கதைகள் போல நினைச்சி வந்தா மன்னிக்கவும்.இந்த கடையில் அந்த டீ கிடைக்காது. ஆகாஷனா, ஆகாயம் தீண்டாத மேகம் மாதிரி தவறு செய்யும் சாதாரன மானுடர்களை சுற்றி நட...