36

264 30 93
                                    

நாளை ரூபினியை சந்திக்க ஏற்பாடுகளை ராதா செய்திருக்க மீனாக்‌ஷிக்கு அன்றிரவு வேலை என்றானது. இரவு எட்டு மணி அளவில் அவள் வேலைக்கு செல்ல தயாராகுவதை ஷக்தி பார்த்துக்கொண்டு இருந்தான்.

" மீனாக்‌ஷி, அடியேய் மீனாக்‌ஷி, மீனு குட்டி .. இன்னைக்கு கண்டிப்பா வேலைக்கு போய்த்தான் ஆகனுமா? ப்ளீஸ்டி புருசன் கெஞ்சி கேட்குறேன்ல. இன்னைக்கு ஒரு நாள் லீவ் போடுடி" என்று அவளை பார்த்து கெஞ்சுதலும் கொஞ்சுதலுமாக கேட்டான். மீனாக்‌ஷிக்கு ஷக்தியிடம் மிகவும் பிடித்ததே அவன் அவளிடம் வரும் போது அவன் ஒரு ஆண்மை பொருந்திய அழகனாக இருந்தாலும் அந்த நேரத்தில் அவன் ஆண்மை திமிர் எதுவுமே இருக்காது. கம்பனியிலாகட்டும் அல்லது தன் நண்பர்களிடம் ஆகட்டும் கொஞ்சம் கரார் பேர்வழியாக இருந்தவன் மீனாக்‌ஷியிடம் மட்டும் அப்படியே தாயிடம் அடைக்கலம் புகும் சேயாக மாறிவிடுவேன். இவ்வளவு ஏன் சிவா பிறந்த ஆரம்பத்தில் தன்னை விடுத்து அவள் தங்கள் மகனிடம் அதிகம் நேரம் செலவழிப்பதாக கூறி சண்டையிட்டவன் அவன்.

" டேய் நான் அழகா இருக்கேன்னு எனக்கு தெரியும். அதுக்காக இப்படியா என்ன சைட் அடிப்ப" என்று மீனாக்‌ஷி சினுங்க அவன்

" அடியே இப்படி சினுங்காத. அப்புறம் உன்ன ஹாஸ்பிடல் போக விடமாட்டேன்" என்று சீரியசாக கூறினான்.

" இங்க பாருங்க. நேத்தைக்கும் வேலைக்கு போகல்ல. இன்னைக்கு போகல்லன்னா அப்புறம் என்ன வேலை விட்டு தூக்கிடுவாங்க" என்று கூற அவன் அவளை பார்த்தவன்

" எது என் பொண்டாட்டிய தூக்குவானா. எவன் டா அவன் என் பொண்டாட்டிய தூக்க போறவன். எவனாச்சும் என் பொண்டாட்டி பக்கதுல வந்தான் மவனே அவன் கை கால் உடைஞ்சிடும்" என்க அவனை பார்த்து உதட்டை துருத்திக்காட்டியவள்

" போதும் சார் உங்க டிராமா. இப்படி பேசுரவருதான் அன்னைக்கு நான் க்ரிஷ் கூட என்ன பண்ணாலும் உங்களுக்கு ஒக்கேயான்னு கேட்டப்போ ' உனக்கு வேண்டியத பண்ணிக்க' ன்னு சொன்னாருக்கும்" என்று கூற ஷக்தியின் முகம் சுருங்கியது. அவனுக்கு தெரியும் மீனாக்‌ஷி காலத்துக்கும் இதை மறக்காமல் அவ்வப்போது அவனுக்கு குத்தி காட்டுவாள் என்று. ஏனென்றால் மீனாக்‌ஷியின் இயல்பு அது. வேண்டுமென்று அவள் அப்படி செய்வதில்லை. பேச்சு வாக்கிலே அது வந்துவிடும். இருந்தாலும் ஷக்தி தான் செய்த தவறுக்கு அதை தண்டனையாக ஏற்றுக்கொண்டான். என்ன இருந்த போதும் மீனாக்‌ஷி இனி அவனை விட்டு போகபோவதில்லையே. அது ஒன்றே அவனுக்கு போதும். ஷக்தியின் முகவாட்டத்தை கவனித்தவள்

சிந்தையில் தாவும் பூங்கிளிWhere stories live. Discover now