24

266 28 40
                                    

அவளின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை ஊகித்திருந்த ரேஷ்மா

" ஷக்தி வாழ்க்கை என்னாகும்னு யோசிக்கிறியா? அதை பத்தி ரொம்ப யோசிக்காதடா. நான் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்குறதே ஷக்திக்காகத்தான். நான் ஷக்திய கல்யாணம் பண்ணிக்கிறேன். நீ சரியான ஒரு முடிவ எடுத்தா நம்ம நாளு பேரு வாழ்க்கையும் நல்லா இருக்கும். அப்புறம் உன் பையன கண்டிப்பா க்ரிஷ் ஏத்துப்பான். இல்லைன்னா கூட பரவாயில்லை. நாங்க பார்த்துக்கிறோம்" என்று கூற மீனாக்‌ஷிக்கு எங்கிருந்து கோபம் வந்தது என்று புரியவில்லை.

" எந்திரிடி" என்று ரேஷ்மாவை பார்த்து கோபமாக கூற ரேஷ்மாவிற்கு ஒரு கணம் மீனாக்‌ஷியின் இந்த கோபமான தோற்றம் புரியவில்லை. காரணம் அவள் அறிந்த வகையில் மீனாக்‌ஷியிடம் கோபத்தை கண்டதேயில்லை. எப்போதும் அமைதியாக இருப்பவள் சடுதியாக கோபப்பட்டால் அதை பார்ப்பவர்களுக்கு முதலில் அதிர்ச்சியும் பின்னர் பயமும் ஏற்படும். இங்கு ரேஷ்மாவிற்கும் அதுதான் நடந்ததது. இருந்தாலும் அவள் தன் முகத்தில் அதிர்ச்சியை காட்டினாலும் பயத்தை காட்டிக்கொள்ளவில்லை. இவை எல்லாவற்றிற்கும் தயாராகத்தான் ரேஷ்மா மீனாக்‌ஷியை சந்திக்க வந்திருந்தாள்.

" என்ன மீனாக்‌ஷி ஏன் இப்போ கோபமாகிற?" என்று கேட்க மீனாக்‌ஷி எதுவும் கூறமால்

" வெளிய போடி" என்றாள். மீனாக்‌ஷியின் இந்த பதில் ரேஷ்மா எதிர்பாராத ஒன்று. ரேஷ்மாவிற்கு இன்றே அவள் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டிய கட்டாயம். காரணம் அவளின் தந்தை அவளது திருமணத்திற்கு கொடுத்திருந்த கெடு அடுத்த மாதத்துடன் முடிவடைகின்றது. அவளின் தந்தை எப்போதும் ஒரு விடயத்துக்கு போதியளவு கெடு கொடுப்பார். அது முடிந்ததும் அவர் சொல்வதை கேட்க வேண்டும். இதுதான் அவரது பாணி. இன்னும் ஒரு மாதத்தில் கண்டிப்பாக தான் யாரையும் கைகாட்டாமல் விட்டாள் அவளின் தந்தை ஒரு மாப்பிள்ளையை கொண்டு வருவார் என்று அவளுக்கு தெரியும்.

ரேஷ்மாவிற்கு மீனாக்‌ஷியின் வீட்டில் நடந்த குளறுபடிகளை கூறியது பட்டம்மாதான். இன்றும் அவர் இவர்கள் இருவரும் தனியாக பேசிக்கொள்ளட்டும் என்று எண்ணித்தான் மீனாக்‌ஷியின் மகனை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றுள்ளார். கடந்த சில மாதங்களாக மீனாக்‌ஷியின் செயற்பாடுகள் ஷக்தியை மிகவும் பாதிக்கின்றது என்பதை புரிந்து கொண்ட அவர், தனக்கு மகனை போல இருக்கும் ஷக்தி மனதால் வேதனைபடுவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ரேஷ்மாவை பற்றி ஏற்கனவே பட்டம்மாவுக்கு தெரியும். ஷக்தி காலேஜில் படிக்கும் போது ரேஷ்மா அவனுக்கு ப்ரபோஸ் செய்ததை அவரிடம் கூறியுள்ளான். ஆனால் இப்போது எப்படியோ ரேஷ்மாவை அவர் தேடிப்பிடித்து அவளின் நாடி பிடித்து பார்க்க அவள் இப்போதும் ஷக்தியை நினைத்து திருமணத்தை தள்ளி வைத்திருப்பது தெரிந்தது. இந்த சந்தர்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள பட்டம்மாவும் ரேஷ்மாவும் சேர்ந்து போட்ட திட்டம்தான் இது.

சிந்தையில் தாவும் பூங்கிளிWhere stories live. Discover now