45

209 23 16
                                    

இங்கு சென்னையில்...

" அப்பா, அந்த வீட்டுல இருந்து யாராச்சும் இங்க வந்தாங்கன்னா என் வாயால கேவலமா திட்டு வாங்குவாங்க" என்று தனது முட்டைக்கண்களில் கோபத்தை தேக்கி வைத்து நின்ற பார்வதியை பார்த்த க்ரிஷ்ஷுக்கே ஒரு கனம் பயம் வந்தது. க்ரிஷ் தன் மகளை அருகில் வரும்படி அழைத்து தன் கைகளை நீட்டிக்கொண்டிருக்க அவள் அவன் கைகளை தட்டி விட்டால். ரூபினியோ தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல சமையல் அறையில் சமைக்கின்றேன் என்ற பேர்வழியில் அமைதியாக நின்று கொண்டிருந்தால்.

" அப்படியெல்லாம் பேச கூடாது பார்வதி. இதென்ன புதுசா கோபம்லாம் படுற. என்னதான் எதிரியா இருந்தாலும் நம்ம வீட்டுக்கு வந்தா அவங்கள நாம வரவேற்கனும். அதுதானே நம்ம தமிழர் பண்பாடு" என்று கூற அவனை முறைத்தவாறே,

" நான் தமிழச்சி இல்ல. தெலுங்கச்சி போதுமா. என் பண்பாடு வேற" என்று கூற க்ரிஷ்ஷிற்கு சிரிப்பு வந்துவிட்டது. " அம்மா உன் புருசன் ரொம்ப ஓவரா பண்றாரு. நான் சொல்ரத கேட்பாரா மாட்டாரா? ஓய் அம்ம்மா... உனக்கு காது கேட்குதா இல்லையா?" என்று ரூபினியை அழைக்க அவள் அமைதியாக வந்து நின்றால்.

" என்ன, கல்யாணத்துக்கு பொண்ணுபார்க்க வந்த மாதிரி அமைதியா இருக்க. ஏதாச்சும் பேசுமா. உன் புருசன் ரொம்ப பண்றாருமா. வேணும்னா அந்த பையன், அதான் எங்கப்பாவோட அருமை அண்ணன் பையன் ராதா அத்தை வீட்டுல தங்கிக்கட்டும். நான் ரம்யாவ இங்க வந்துட சொல்ரேன்" என்று கூற ரூபினி இப்போது பார்வதியை நோக்கினால்.

" ரம்யாவ எதுக்கு இங்க கூப்பிடுற. அந்த பையன் அங்க  தங்குறதுக்கும் ரம்யாவ இங்க அழைச்சிட்டு வர்றதுக்கும் என்ன சம்பந்தம்" என்று கேட்டால்.

" ஒரு வேலை ரம்யா யாரையும் காதலிச்சி, வர்ற பையனுக்கு ரம்யாவ பிடிச்சி போயி, அவன் ரம்யா காதல கலைச்சி விட்டு... எதுக்கு வம்பு. அப்பன போலத்தானே பிள்ளையும் இருப்பான்" என்று கூற ரூபினியின் கரம் பார்வதியின் கண்ணத்தில் இருந்தது.

சிந்தையில் தாவும் பூங்கிளிWhere stories live. Discover now