29

305 29 245
                                    

கடவுள் அமைத்து வைத்த மேடைதான் வாழ்க்கை. ஆனால் அதில் கதாபாத்திரங்களாக இருக்கும் மனிதன் செய்யும் குளறுபடிகள் அதிகம். விதியை நம்பும் மனிதன் கூட தனக்கு ஏதும் நன்மை கிடைக்கும் எனும் போது எந்த காரியத்தையும் செய்ய துணிந்துவிடுவான். தன் வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் என்றால் அவன் எந்த எல்லைக்கும் செல்ல தயங்கமாட்டான். ஷக்திக்கு அவனின் காதல் விலைமதிப்பில்லாத ஒன்று. அதை அவன் அடைய எந்த நிலைக்கும் இறங்கி செயல்படுவான் என்பதை தனது செயல்கள் மூலம் நிரூபித்துக்கொண்டிருக்கின்றான். அவன் செய்வது சரியா இல்லை தவறா என்ற விவாதம் நமக்குத்தானே அன்றி அவனுக்கில்லை. அவன் பார்வையில் தனது காதலை அடைய அவன் செய்யும் அனைத்தும் சரியே.

மீனாக்‌ஷியை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து டாக்டருக்காக மீனாக்‌ஷியின் பெற்றோர் மற்றும் ரேஷ்மா காத்திருந்தனர். ரேஷ்மாவுக்கு கிரிஷ்ஷை விட மீனாக்‌ஷியின் மீது கோபம் அதிகமாக வந்தது. தான் காதலித்தவன் மோசமாக நடந்துகொண்டால் அதற்கு இவள் ஏன் தற்கொலை முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு. க்ரிஷ் மேல் ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. அவள் எந்த காரணத்தினால் மீனாக்‌ஷியின் காதலுக்கு உதவினால் என்பதும் தெரிந்ததே.

மீனாக்‌ஷியை பரீட்சித்த டாக்டர் வெளியில் வந்து

" அவங்களுக்கு பெருசா ஏதும் இல்ல. உடம்புல சக்தி இல்லாம மயக்கம் போட்டிருக்காங்க. அவங்க கெட்ட நேரம், விழுந்தது மேசையோட ஓரம் என்பதால அந்த கூரான பகுதி அவங்க தலையில பட்டிருக்கு. அதனாலதான் அவங்களுக்கு ப்ளட் லாஸ் அதிகமாச்சி. நாங்க இப்போ ட்றிப்ஸ் அண்ட் ப்ளட் ஏத்திக்கிட்டு இருக்கோம். மத்தபடி பயப்பட ஒன்னுமே இல்லை" என்று டாக்டர் கூற இது எதையும் கேட்கும் மனநிலையில் ரேஷ்மா இல்லை. அவள் மனதில் க்ரிஷ் மீனாக்‌ஷியிடம் எவ்வாறு இப்படி மோசமாக பேசியிருக்கலாம் என்பதே ஓடிக்கொண்டிருந்தது. க்ரிஷ்ஷின் போனுக்கு பலதடவை கால் செய்தும் அவனின் மொபைல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வர உடனே அவள் ஷக்திக்கு கால் செய்தாள்.

சிந்தையில் தாவும் பூங்கிளிWhere stories live. Discover now