6

443 33 141
                                    

இன்று....
ரூபினியின் இடையை அழுத்தமாக கட்டிப்பிடித்திருந்தவன் ஒரு சில நிமிடங்கள் வாய்விட்டு அழுதான். ரூபினியால் க்ரிஷை எப்போதும் கணிக்க முடியவில்லை. அவளுடைய வாடிக்கையாளர்கள் எல்லோரையும் இலகுவாக அவர்களுடனான இரண்டாவது சந்திப்பிலேயே அவள் சரியாக கணித்து விடுவாள். ஆனால் கடந்த எட்டு மாதங்களாக க்ரிஷுடன் மாதம் ஒரு நாள் என பழகி இருந்தாலும் அவனை அவளால் சரியாக எடை போட முடியவில்லை.

அவளை அணைத்திருந்த அவனது கைகளை சிறிது விலக்கியவள்

" க்ரிஷ், எனக்கு நேரமாகுது. வீட்டுல தேடுவாங்க. நான் போகனும்" என்று கூற அவளை அணைத்திருந்த அவன் எழுந்தான்.

" சாரி நான் ஏதோ எமோசனல்ல உங்கள கஷ்டப்படுத்திட்டேன்" என்று கூற அவனது தலையில் கைவைத்து அவளது விரல்களால் அவனது கேசத்தை கலைத்துவிட்டவள்

" என்ன வாங்க, போங்கன்னு மரியாதையா கூப்பிடுற ஒரே ஆளு நீங்க மட்டும்தான்" என்று சிரித்தவள்

"என்ன கொஞ்சம் பஸ் ஸ்டாப் வரைக்கும் டிராப் பண்ண முடியுமா?" என்று கேட்க அவனின் தேவைக்காக அவள் வந்திருந்த காரணத்தால் அவளை டிராப் செய்ய தயாரானான்.

அவனின் பைக்கில் ஏறி அமர்ந்தவள் அவன் உடலில் இவள் உடல் கொஞ்சமும் படாமல் மிகவும் நேர்த்தியாக அமர்ந்தாள். என்னதான் அவள் ஒரு விலைமகளாக இருந்தாலும் க்ரிஷிற்கு அவளின் இப்படியான சிறிய செயல்கள்தான் அவளை ஒரு வேசியாக பார்ப்பதைவிட்டும் தவிர்த்தது.

சிறிது தூரம் இருவரும் சென்றதும் கண்ணில் ஒரு காபி சாப் தென்பட ரூபினி

" க்ரிஷ், நான் பகல் சாப்பிட்டது . இப்போ ரொம்ப பசிக்குது. அந்த காபி சாப்ல கொஞ்சம் நிறுத்துறீங்களா? உங்களால என்கூட சாப்பிட முடியுமா? இல்லை யாரும் பார்த்தா அசிங்கமாயிடும்னு நினைச்சீங்கன்னா நம்ம போயிடலாம்" என்று கூறினாள். பசி என்ற ஒரு வார்த்தையில் மனம் இளகியவன்

" பரவாயில்லை, எனக்கும் லேசான பசிதான். வாங்க ரெண்டு பேருமே போய் சாப்பிடலாம்" என்று கூறி அந்த காபி சாப்பை அடைந்தனர். இருவரும் தங்களுக்கு தேவையான உணவுகளை ஆடர் செய்து காத்திருந்தனர்.

சிந்தையில் தாவும் பூங்கிளிWhere stories live. Discover now