ஹாய் வட்டீஸ்,
இந்த ஸ்டோரி எழுதுறதுக்கு முதல் காரணம் மினாக்ஷி அவள் குரலில் பாடி க்ரிஷ்ஷிற்கு அனுப்பிய இந்த பாடல்தான். ஒரு 5 நிமிடம் 57 வினாடிகள் செலவழித்து இந்த பாடலை கேட்டுவிட்டு இந்த அப்டேட்டை படியுங்கள். இல்லை என்றால் இந்த பாடலின் இருக்கும் ஃபீல் புரியாமல் போய் விடும். 2001 இல் வந்த பாடல் இது. பலர் கேட்டிருக்க மாட்டீர்கள். " ஆயிரம் பொய் சொல்லி" என்ற வெளியிடப்படாமல் இருக்கும் திரைப்பட பாடல். என்னை பொறுத்தவரை இந்த பாடலை கேட்காமல் இந்த அப்டேட்டை படித்தால் க்ரிஷ் மற்றும் மீனாக்ஷியின் உணர்வுகள் புரியாமல் போய்விடும். அப்டேட் படிச்சிட்டு, இந்த பாட்ட கேட்டு படிச்சவங்க காமண்ட்ஸ்ல சொல்லுங்க.--------------------------------
இரவு தூங்க வந்தவன் தனது மொபைலை பார்க்க அதில் மீனாக்ஷியின் ஆடியோ மெசேஜ் இருந்தது. அதை பார்த்தவன் மொத்த நேரம் மூன்று நிமிடம் என காட்ட
' இந்த லூசு இன்னைக்கு என்ன வாய்ஸ் மெசேஜ்லாம் பண்ணிருக்கு' என்று எண்ணியவன் காதில் ஹெட்செட்டை மாட்டியவன் கேட்க தொடங்கினான்.
" ஏதோ மின்னல் ஏதோ மின்னல் தேகம் தொடுகிறதே...
போட்டி போட்ட தாழம்பூவின் பூட்டு உடைகிறதே....
சல்லாப வெயில் அடிக்க கல்லூறும் புயல் அடிக்க...
ஆசை மொட்டு விட நாணம் கட்டிலிட கூந்தல் கூட சுடுதே..
பார்வை பின்னலிட ஜாடை ஜன்னலிட தாகம் மூட்டிவிடுதே...அந்தி மஞ்சள் அரைத்தெடுத்தேன்
நட்சத்திரத்தால் குழல் முடித்தேன்,மேகம் பறித்து மெத்தை தைத்தேன்
பூவாய் எனையோ கொட்டிவைத்தேன்,வானவில்லில் உடை தரித்தேன்
வாசல் கதவில் விழி பதித்தேன்,இதழின் ரசத்தில் இலை விரித்தேன்
விருந்தாய் எனையே கடை விரித்தேன்,ஒரு பொக்கிசத்தை எடுத்து வந்தேன்
புது நதியில் குளிக்க வந்தேன்..."இந்த பாடலை மீனாக்ஷி மிகவும் ரசித்து பாடி அவனுக்கு அனுப்பியிருந்தாள். க்ரிஷ் தனது மெசேஜை கேட்டுவிட்டான் என்பது தெரிந்ததும் அடுத்த வாய்ஸ் மெசேஜை அவனுக்கு அனுப்பினாள்.
YOU ARE READING
சிந்தையில் தாவும் பூங்கிளி
Non-Fictionசத்தியமா எனக்கு எப்படி சொல்ரதுன்னு தெரியல. காரணம் முழுக்கதையும் இன்னுமே யோசிக்கல. கண்டிப்பா வழமையான கதைகள் போல நினைச்சி வந்தா மன்னிக்கவும்.இந்த கடையில் அந்த டீ கிடைக்காது. ஆகாஷனா, ஆகாயம் தீண்டாத மேகம் மாதிரி தவறு செய்யும் சாதாரன மானுடர்களை சுற்றி நட...