வேலை முடித்து மீனாக்ஷி கலைப்பாக வீடு வந்து சேர்ந்தவள் அசதியாக சோபாவில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் வீட்டின் காலிங்க் பெல் அடிக்க மெதுவாக எழுந்து கதவை திறந்தவளுக்கு ஆச்சரியம்.
" ஹேய் ரேஷ்மா எப்படி இருக்க. நீ எப்போ பெங்களூரு வந்த" என்று கேட்க எப்போதும் போல புன்னகைத்தவள்
" என்ன டாக்டர் மேடம் உள்ள கூப்பிட மாட்டீங்களா?" என்று கேட்டாள். தன் தோழியை கண்ட அதிர்ச்சியில் இருந்த மீனாக்ஷி அசடு வழிந்தவள்
" ஹேய் சாரிடி, ரொம்ப நாள் கழிச்சி உன்ன பார்க்குறேனா, அதான் அதிர்ச்சியில என்ன பண்றதுன்னே தெரியல. உள்ள வா ரேஷ்மா" என்று அவளை வீட்டினுள் அழைத்து சென்றாள். வீட்டை சுற்றி தன் விழிகளை ரேஷ்மா சுழள விட்டவள்
" என்னடி சொந்த வீடா?" என்று கேட்டாள். அதற்கு புன்னகைத்த மீனாக்ஷி
" என்னடி கிண்டலா, உன் அப்பா அளவுக்கு எல்லாம் எங்க அப்பா வசதியானவரு இல்லம்மா" என்று தன் தோழியை கலாய்த்தவள் தொடர்ந்து
" இல்லடி வாடகை வீடுதான். வந்து இரண்டு மாசம்தான் ஆகுது" என்றாள். வீட்டில் யாருமில்லாமல் இருப்பதை கண்ட ரேஷ்மா
" வீட்ல யாருமே இல்லையா?" என்று கேட்க
" தொடர்ச்சியா மூன்று நாளா எனக்கு நைட் ஷிஃப்ட். அதனால நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்னு பட்டம்மா பையன கூட்டிக்கிட்டு வெளியில போயிட்டாங்க" என்று கூறியவளை நோக்கிய ரேஷ்மா
" ஷக்தி எங்க?" என்று கேட்க மீனாக்ஷி என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தாள். இதுவே தன் கல்லூரி தோழி ரேஷ்மாவாக இருந்திருந்தால் தன் வாழ்வில் நடந்த எல்லாம் கூறியிருப்பாள். ஆனால் இப்போது வந்திருப்பது எப்படியான ரேஷ்மா என்று மீனாக்ஷியால் கணிக்க முடியவில்லை. காரணம் ஷக்தியை அவள் காதலித்தது கல்லூரி நாட்களிலேயே மீனாக்ஷிக்கு தெரியும். கல்லூரி நாட்களின் பின் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் யாரும் எதிர்பாராத சுழலில் சிக்கி சின்னாபின்னமாகியது மட்டுமன்றி கடந்த சில நாட்களாக மீனாக்ஷி வாழ்வில் சுனாமியும் வந்துவிட்டது. மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டிய கதையாகியது அவள் வாழ்க்கை.
YOU ARE READING
சிந்தையில் தாவும் பூங்கிளி
Non-Fictionசத்தியமா எனக்கு எப்படி சொல்ரதுன்னு தெரியல. காரணம் முழுக்கதையும் இன்னுமே யோசிக்கல. கண்டிப்பா வழமையான கதைகள் போல நினைச்சி வந்தா மன்னிக்கவும்.இந்த கடையில் அந்த டீ கிடைக்காது. ஆகாஷனா, ஆகாயம் தீண்டாத மேகம் மாதிரி தவறு செய்யும் சாதாரன மானுடர்களை சுற்றி நட...