மனதின் காயங்களுக்கு மிகச்சிறந்த மருந்து காலம். சக மனிதர்களால் குத்திக்கிழிக்கப்படும் மனதுக்கு அது கேட்கும் நிம்மதியை எப்போதும் கொடுப்பது காலம்தான். ஆனால் அதே காலம் நம் வாழ்க்கையை சில நேரங்களில் தலை கீழாக புரட்டி போட்டுவிடும்.
ரூபினி அங்கிருந்து வெளியேறியதும் அந்த அறையில் மிகவும் அமைதியான ஒரு சூழல் உருவானது. அறையின் கதவின் அருகில் இருந்த க்ரிஷ்ஷை தன் அருகில் வருமாறு ராதா அழைக்க க்ரிஷ்ஷும் அவள் அருகில் சென்றான். அவள் அவன் கைகளை பிடித்து கட்டிலில் உட்கார செய்ய அது சிறிய கட்டில் என்பதால் இருவரும் அமர கொஞ்சம் கஷ்ட்மாக இருந்தது. ராதா கரிஷ்ஷை ஒரு தாய் தன் மகனை மிருதுவாக அணைத்துக்கொள்வது போல அணைக்க க்ரிஷ் தீ பட்டவனை போல அவள் அணைப்பில் இருந்து விடுபட முயன்றான். அவன் தன் மீதுள்ள கோபத்தில்தான் இப்படி செய்கின்றான் என ராதா நினைத்தாள்.
" ஏண்டா அக்கா தொடக்கூடாத. கைய இப்படி இழுத்துக்குற. முன்னாடிலாம் அக்கா அக்கானு என் துப்பட்டாவ பிடிச்சிக்கிட்டு சுத்தினவந்தானேடா நீ. இப்போ என்ன என் மேல கோவமா? அன்னைக்கு உன்ன அப்பா வீட்ட விட்டு போக சொன்னப்போ என்னால அவர எதிர்த்து பேசியிருக்க முடியும். உனக்கே தெரியும் அப்பா ஒரு ஹார்ட் பேசண்ட்னு. அன்னைக்கு அவரு சொன்னது ' உன்ன யாரும் நம்பினா அவங்களும் உன்கூட போகலாம்' அப்படின்னு. எனக்கு என் தம்பி மேல 200% நம்பிக்கை இருந்திச்சி. இப்பவும் இருக்கு.
ஒரு வேலை நான் அன்னைக்கு அப்பாவ எதிர்த்து பேசியிருந்தாலோ இல்லை உன்கூட வந்திருந்தாலோ நம்ம அப்பா அன்னைக்கே உயிர விட்டிருப்பாரு. எனக்கு நீயா இல்லை அப்பாவான்னு வரும் போது நிச்சயமா நீதான் க்ரிஷ். இந்த உலகத்துல உன்னவிட எனக்கு எதுவுமே பெரிசில்ல. இதோ நிக்கிறாரே சுரேஷ் அவர கூட உனக்காக தூக்கிய எறிய பார்த்தவ நான். ஆனா அன்னைக்கு இருந்த நிலமையில அப்பா கூட ஒருத்தர் இருந்து உன் பக்கம் தப்பு இருக்காது என்பத நிரூபிக்கத்தான் நான் உன்கூட வரல்ல. நீ வீட்டை விட்டு போனதும் எப்படியும் ஷக்தி, இல்லைன்னா உன் ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போவேன்னுதான் நினைச்சேன். ஆனா நீ இப்படி யாருக்கும் தெரியாம உன் படிப்ப கூட பாதியில விட்டுட்டு போவேன்னு கனவுலயும் நினைக்கல" என்று பேசி முடித்தவள் மூச்சுவாங்கினாள். பக்கதில் இருந்த தண்ணீர் பாட்டிலை கைகாட்டி கேட்க க்ரிஷ் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தான்.
YOU ARE READING
சிந்தையில் தாவும் பூங்கிளி
Non-Fictionசத்தியமா எனக்கு எப்படி சொல்ரதுன்னு தெரியல. காரணம் முழுக்கதையும் இன்னுமே யோசிக்கல. கண்டிப்பா வழமையான கதைகள் போல நினைச்சி வந்தா மன்னிக்கவும்.இந்த கடையில் அந்த டீ கிடைக்காது. ஆகாஷனா, ஆகாயம் தீண்டாத மேகம் மாதிரி தவறு செய்யும் சாதாரன மானுடர்களை சுற்றி நட...