அடுத்து வந்த நாட்களில் மீனாக்ஷியால் க்ரிஷ்ஷை சந்திக்க முடியவில்லை. சந்திக்க முடியவில்லை என்பதை விட சந்திக்க விரும்பவில்லை. அன்று அவள் அவனது வீட்டில கண்ட காட்சி அவளை அணு அணுவாக கொன்றது.
நாளை ஜனவரி முதலாம் நாள், எல்லோர் வாழ்விலும் விடியலை கொண்டு வரும் என்று நினைது பல முடிவுகளை எடுக்கும் நாள். நம்மிடம் உள்ள கெட்ட பழக்கங்கள் பலவற்றை துடைத்தெறிந்து புதிய மனிதனாக எல்லோரும் இனி வரும் நாட்களை வாழ ஆசைப்படும் நாள். ஆனால் இந்த ஜனவரி ஒன்று நம் கதையின் மாந்தர்களுக்கு என்ன செய்ய போகின்றது என்பது யாருக்கும் தெரியாத ஒன்று.
" க்ரிஷ், இன்னைக்கு நியூ இயர் என்றதால எனக்கு வேற ஒரு பெரிய கஸ்டமர்கிட்ட இருந்து கால் வந்திருக்கு. ஹி ஈஸ் லீவிங்க் யூ எஸ் டுனைட். நம்ம நாளைக்கு மீட் பண்ணலாமா? " என்று ரூபினி கால் செய்து கேட்க மறுமுனையில் அவன் அமைதியாக இருந்தான்.
"இங்க பாரு க்ரிஷ், அவரு எனக்கு இருபத்தஞ்சாயிரம் கொடுப்பாரு. இன்னைக்கு அவருகிட்ட போனா நான் இந்த மாசம் வேற யார்கிட்டயும் போக தேவையில்ல. இந்த வேசி வாழ்க்கை இந்த மாசம் மட்டும் ஒரே நாளோட போயிடும். புரிஞ்சிக்க" என்று கூற அவன் இப்போதும் அமைதியாக இருந்தான். அவன் அமைதியில் கோபம் கொண்டவள்
" நான் ஒன்னும் உன் பொண்டாட்டியோ இல்லை உன் லவ்வரோ கிடையாது. ஒன்னு ஆமானு சொல்லு இல்லை இல்லைன்னு சொல்லு. அதென்ன எதுக்கு எடுத்தாலும் அமைதியா இருக்க. உன் மனசு அறிஞ்சி நடக்க நான் ஒன்னும் நீ கட்டிக்க போற பொண்ணு இல்ல. உன்னால முடிஞ்சா இருபதாயிரத்த இன்னைக்கு பேமண்டா கொடு. நான் உன் வீட்டுக்கு வர்றேன். இல்லைன்னா நான் நாளைக்குத்தான் வருவேன். இதுக்கும் நீ எதுவும் பேசாம அமைதியா இருந்தின்னா இனிமே உன் வீட்டு பக்கம் கூட வர நான் மாட்டேன்" என்று கோபமாக பேசினாள்.
பழகிய இத்தனை நாட்களில் ரூபினி அவனிடம் கோபமாக பேசியதே இல்லை. அதற்கு சந்தர்ப்பம் அமையவும் இல்லை. ரூபினி அவன் மீது கோபப்பட்டு பேசியது க்ரிஷ்ஷிற்கு ஒரு வகையான சந்தோசத்தை கொடுத்தது.
YOU ARE READING
சிந்தையில் தாவும் பூங்கிளி
Non-Fictionசத்தியமா எனக்கு எப்படி சொல்ரதுன்னு தெரியல. காரணம் முழுக்கதையும் இன்னுமே யோசிக்கல. கண்டிப்பா வழமையான கதைகள் போல நினைச்சி வந்தா மன்னிக்கவும்.இந்த கடையில் அந்த டீ கிடைக்காது. ஆகாஷனா, ஆகாயம் தீண்டாத மேகம் மாதிரி தவறு செய்யும் சாதாரன மானுடர்களை சுற்றி நட...