21

332 28 251
                                    

காலேஜ் கல்ச்சரல்ஸ் ஆரம்பமாகியது. மூன்றாம் வருட மாணவர்கள் இல்லை எனினும் எந்த ஒரு தடங்களும் இன்றி நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. இந்த நிகழ்வை சரியாக ஒழுங்கமைத்து அதை செயற்படுத்திக்கொண்டிருக்கும் மீனாக்‌ஷி மற்றும் சாலமனுக்கு எல்லோரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

கடைசியாக சினிமா தியேட்டரில் நடந்த சண்டைக்கு பின் இந்த தடவையும் க்ரிஷ்ஷே மீனாக்‌ஷியிடம் மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆனான். அவளும் அதை பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் காதலுடன் அவன் கேட்ட மன்னிப்பையும் வழங்கினாள். இருந்தாலும் கல்ச்சரல்ஸ் நடக்கும் இந்த நாட்களில் அவளால் க்ரிஷ்ஷுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை.

எல்லா நிகழ்வுகளும் சரியாக நடைபெற பாட்டு போட்டியில் மட்டும் சிறு குழறுபடி ஏற்பட்டது. காரணம் கடைசி தினத்தில் பாட்டுப்போட்டியை வைக்க, எல்லா கல்லூரி மாணவர்களுக்கும் பாட நேரம் கொடுத்து இரண்டாவது சுற்றுக்கு அந்த போட்டியை கொண்டு செல்ல நடுவர்களுக்கு போதுமான நேரம் இருக்கவில்லை. உடனே நடுவர்கள் பாடல்கள் வெளியாகி, திரைப்படம் வெளியிடப்படாமல் இருக்கும் படங்களில் இருந்து டூயட் பாடல்களை பாடுமாறு போட்டியாளர்களை கேட்க அங்கு சிறு குழப்பம் உண்டானது. காரணம் அப்படியான பாடல்கள் மிக சொற்பமாகவே இருந்தது. அப்படியான பாடல்கள் இருந்தாலும் அந்த பாடல் மூலம் நடுவர்களை கவர்வது போல உள்ள பாடல்கள் மிக மிக சொற்பமே. ஆனால் மீனாக்‌ஷிக்கு ஒரு பாடல் மனதில் உதித்தது. ஆனால் அவளுக்கு ஜோடியாக யாரை பாட வைப்பது என்பதில்தான் பிரச்சனை ஆரம்பமானது.

இவர்களின் காலேஜில் பாடல் படிக்கும் பெண்கள் அதிகமாக இருந்தாலும் ஆண்கள் மிகவும் குறைவு. ஷக்தி ஒரு அளவுக்கு பாடுவான். அதுவும் சூப்பராக எல்லாம் பாடுவான் என்று கிடையாது. ஆனால் அவனை ஒரு சப்போர்டிங்க் சிங்கர் ஆக பயன்படுத்த முடியும். கடைசியில் வேறு வழியின்றி ஷக்தியையே மீனாக்‌ஷியுடன் டூயட் பாட அழைக்க அவனும் சந்தோசமாக ஏற்றுக்கொண்டான். இந்த பாடல்தான் இவர்கள் மூவரின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்க போகின்றது என்று அப்போது இவர்களுக்கு தெரியவில்லை.

சிந்தையில் தாவும் பூங்கிளிWhere stories live. Discover now