காலேஜ் கல்ச்சரல்ஸ் ஆர்கனைசிங்க் ஆட்டம் பாட்டம் என கலகலப்பாக சென்றது. மீனாக்ஷிகூட மிகவும் சந்தோசமாக தனது வேலைகளை சுறுசுறுப்பாக செய்தாள். மூண்றாம் வருட மாணவர்கள் பலர் காலேஜில் இல்லாதது இவர்களுக்கு மிகவும் இலகுவாக இருந்தது. இல்லை என்றால் இரண்டாம் வருட மூன்றாம் வருட மாணவர்கள் என்ற பிரச்சினைகள் வந்திருக்கும். இன்று அது கூட இல்லாமல் எல்லாம் மிகவும் ஸ்மூத்தாக எல்லாமே போய்க்கொண்டிருந்தது. எவ்வளவுதான் வேலை இருந்தாலும் மீனாக்ஷி தனது நேரத்தை க்ரிஷ்ஷிற்கு ஒதுக்கினாள்.
" மீனாக்ஷி நம்ம இன்னைக்கு சினிமா போகலாமா?" என்று க்ரிஷ் கேட்க அவள் அவனை முறைத்தவள்
" ஏண்டா தம்பி உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா. உன்ன காதலிச்சதும்தான் காதலிச்சேன், எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு. அப்படி இருந்தும் உன்கூட ரெண்டு வாட்டி நான் சினிமாக்கு வந்திருக்கேன். இந்த பிசி செட்யூல்லயும் மறுபடி கூப்பிடுறியேடா?" என்று கூற அவன் கோபமானான்.
" இங்க பாரு மீனாக்ஷி, உனக்கு வர இஷ்டம் இல்லைன்னா சொல்லு. இந்த தம்பினு கூப்பிடுற வேலை எல்லாம் வெச்சிக்காத. எனக்கு செம்ம கடுப்பாகுது" என்று முகத்தை திருப்பிக்கொண்டான். அவனின் கோபம் மீனாக்ஷிக்கு சிறு பிள்ளையின் கோபம் போல தோன்றியது.
" டேய் செல்ல குட்டியில்ல, புஜ்ஜு குட்டியில்ல, என் அம்மு குட்டியில்ல. இன்னைக்கு முடியாதுடா. ப்ளீஸ் டா கண்ணா. புரிஞ்சிக்க. ப்ளீஸ் ப்ளீஸ்" என்று கெஞ்சினாள். இது எதற்கும் நான் அசரமாட்டேன் என்பது போல க்ரிஷ் இருந்தான்.
" சரி நீ இரண்டு நாள் பொறுத்துக்கிட்டின்னா நீ கேட்டியே அந்த 'ஏதோ மின்னல்' சாங்க் டூயட் வெர்சன் நீயும் நானும் பாடலாம். ஏன்னா அந்த பாட்டு ரொம்ப மோசமான பாட்டுடா. அதை பாடினதுக்கு அப்புறம் அதையே சொல்லி என்ன கலாய்க்க கூடாது" என்று கூற அவன் சந்தோசமானவன்
" சரி இரண்டு நாள் பொறுத்துக்கிறேன். இரண்டு நாள் கழிச்சி நீ சினிமாக்கு போகவும் வரனும். இன்னைக்கு நீ வர முடியாதது என்றதுக்கு பனிஷ்மண்ட்டா வேணும்னா அந்த பாட்ட பாடுறத நம்ம வெச்சிக்கலாம்" என்று கூற அவள் அவன் புஜத்தில் அடித்தவள் " சரியான கேடிடா நீ" என்றாள்.
YOU ARE READING
சிந்தையில் தாவும் பூங்கிளி
Non-Fictionசத்தியமா எனக்கு எப்படி சொல்ரதுன்னு தெரியல. காரணம் முழுக்கதையும் இன்னுமே யோசிக்கல. கண்டிப்பா வழமையான கதைகள் போல நினைச்சி வந்தா மன்னிக்கவும்.இந்த கடையில் அந்த டீ கிடைக்காது. ஆகாஷனா, ஆகாயம் தீண்டாத மேகம் மாதிரி தவறு செய்யும் சாதாரன மானுடர்களை சுற்றி நட...