மீனாக்ஷி க்ரிஷ்ஷிடம் காதலை சொன்னது வியாழக்கிழமை. வெள்ளி அன்று அவன் காலேஜுக்கு செல்லாமல் இருக்க அடுத்து வந்த இரு நாட்களும் அவனுக்கு தன் காதல் பற்றி யோசிக்க நல்ல சந்தர்ப்பம் அமைந்தது. ஆம் தன் காதல்தான். மீனாக்ஷி போன்ற ஒரு பெண் காதலிப்பதாக கூறி அதை மறுப்பவன் மிகப்பெரிய முட்டாளாகத்தான் இருக்க வேண்டும். அவளின் வில் போன்ற புருவத்திற்கே அவளை காதலிக்கலாம். அந்த புருவங்களை மட்டும் நாட்கணக்கில் பார்த்துக்கொண்டிருக்கலாம். பருவ வயதில் பன்னிக்குட்டி கூட அழகாக இருக்கும் என்று யாரோ சொல்லி கேள்விப்பட்டது உண்டு. ஆனால் மாசு மரு இல்லாமல் இருக்கும் மீனாக்ஷி போன்ற ஒருத்தியை அவன் ஏன் காதலிக்க கூடாது என்று யோசிக்க ஆரம்பித்தான். ஆனால் இறுதியில் மீனாக்ஷியின் காதலை ஏற்றால் அவனுக்கு பல பிரச்சினைகள் வரும் என்று தோன்றியது. முதலில் வரப்போவது ஈகோ பிரச்சினை.
மீனாக்ஷி காலேஜில் நன்றாக படிப்பாள். க்ரிஷ்ஷோ பார்டரில் பாஸ் செய்யும் சாதாரண இளைஞன். அதே போல மீனாக்ஷி எல்லோருடனும் சகஜமாக பேசும் ஒருத்தி. ஆனால் க்ரிஷ்ஷோ பெண்களிடம் அதிகம் பேசாதவன். இது எல்லாவற்றிற்கும் மேல் அவளுக்கும் இவனுக்கும் இரண்டு வருடம் வயது வித்தியாசம் இருந்தது. இது எல்லாம் யோசித்தவன் கடைசியில் மீனாக்ஷியின் வேண்டுகோளை நிராகரிப்பது என்று முடிவெடுத்தான்.
திங்கள் கிழமை காலேஜுக்கு எல்லோரும் சென்றனர். க்ரிஷ் தன் வாழ்வின் ஒரு சிறந்த ஒரு முடிவை எடுத்ததாக எண்ணினான். மீனாக்ஷியும் ரேஷ்மாவும் க்ரிஷ்ஷின் வருகைக்காக காத்திருந்தனர்.
" மீனாக்ஷி, ஒரு வேலை க்ரிஷ் மாட்டேன்னு சொல்லிட்டான்னா என்ன பண்ணுவ" என்று ரேஷ்மா கேட்க மீனாக்ஷி
" கைய அறுத்துக்கிட்டு செத்துடுவேண்டி. என்னால அவன் இல்லாத ஒரு வாழ்க்கைய நினைச்சி கூட பார்க்க முடியாது?" என்று கூற ரேஷ்மாவுக்கு தூக்கி வாரிப்போட்டது.
" ஹேய் என்னடி சொல்ற?" என்று அதிர்ச்சியாக கேட்க
" ஹாஹா, என்ன பயந்துட்டியா? இங்க பாரு ரேஷ்மா. என்ன உனக்கு ஸ்கூல்ல இருந்தே தெரியும்ல. ஆனா ஸ்கூல்ல நம்ம ரொம்ப க்லோஸ் கிடையாது. இப்போ ஒரு விசயம் சொல்ரேன் கேட்டுக்க.நான் ஆல்ரெடி இரண்டு பசங்கள லவ் பண்ணிருக்கேன். ஆனா என்ன காரணமோ தெரியல கொஞ்ச நாள்ள அது புட்டுகிச்சி. நீ சொன்னியே காதல் வர்றதுக்கு நம்ம காரணம் எதுவும் தேட கூடாதுன்னு. சோ அதே போல நான் என்னோட காதல் ப்ரேக் அப் ஆனதுக்கு காரணம் தேடல்ல. இப்போ மூணாவதா க்ரிஷ்" என்று கூற வாயை பிளந்த படி இது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த ரேஷ்மா
YOU ARE READING
சிந்தையில் தாவும் பூங்கிளி
Non-Fictionசத்தியமா எனக்கு எப்படி சொல்ரதுன்னு தெரியல. காரணம் முழுக்கதையும் இன்னுமே யோசிக்கல. கண்டிப்பா வழமையான கதைகள் போல நினைச்சி வந்தா மன்னிக்கவும்.இந்த கடையில் அந்த டீ கிடைக்காது. ஆகாஷனா, ஆகாயம் தீண்டாத மேகம் மாதிரி தவறு செய்யும் சாதாரன மானுடர்களை சுற்றி நட...